துன்பங்கள் போக்கும் சனீஸ்வர திருத்தலங்கள்
1.    உலகிலேயே
மிக உயரமான சனீஸ்வரர் திருவுருவம் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம்,
கோரிமேட்டிற்கு அருகிலுள்ள மொரட்டாண்டி என்னும் கிராமத்தில் காணப்படுகிறது.
இயற்கைச் சூழலில் வெட்ட வெளியில் இருக்கும்
இவரை தரிசிப்பதற்கு முன், நம்பார்வைக்கு அருளுபவர்  54’ அடி உயரமுள்ள மகா கணபதி ஆவார். இவரது முதுகில்
“நாளை வா“ என்ற வாசகம் உள்ளது.
சனிபகவான் விநாயகரை பிடிக்க முயலும் போது,
முதுகில் நாளை வா என்ற வாசகத்தை எழுதிக் கொண்டு ‘முதுகை பார்’ எனக்கூற, சனியும்
அதைப் பார்த்து, மறு நாள் வர மீண்டுக் விநாயகர் முதுகைக் காட்ட, இதுவே தொடர்
கதையாக, அன்று முதல் சனியால் விநாயகரைப் பிடிக்க இயலவில்லை என்று புராணம்
கூறுகிறது.
‘பக்தானுக் ரஹ ஸ்ரீவிஸ்வரூப மகா சனீஸ்வரர்’
எனப்படும் இவர் பஞ்சலோகத்தில் உருவாக்கப்பட்டு பீடத்துடன் 33 அடி உயரத்தில்
உள்ளார். பீடத்தில் 12 ராசிகளின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டரை
ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் திறந்த 
வெளியில் நவக்கிரகங்கள் தங்கள் வாகனத்துடன் காட்சி தருகின்றன. அத்துடன்
அந்தந்த கிரகத்தின் விருட்சங்களும் அருகில் உள்ளன.
இத்திருத்தலத்தினை சூர்யத் தோட்டம் என்று
அழைக்கிறார்கள். தோட்டத்தில் 27 நட்சத்திரத்தின் மரங்கள், 60 வருடத்திகான விருட்சங்கள்
12 ராசிகளுக்கான மரங்கள் 
9
கிரகங்களுக்கான மரங்கள் என்று 108 மரங்கள் இங்குள்ளது. எழில் மிகு தோட்டத்தின்
நடுவில் 40 அடி நீளமுள்ள வாஸ்து பகவான் இருந்து அருள் பாலிக்கிறார்.
திண்டிவனம்-புதுச்சேரி இடையில் உள்ளது.
 ஸ்ரீவிஸ்வரூப மகா சனீஸ்வரர்’ 
குச்சனூ ர்  ஸ்தலம்
தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு - திருவுருவம் இல்லை.
திருநள்ளாறு                     தர்ப்யராண்யேஸ்வரர். 
| திரு நள்ளாறு | 
| கல்லில் சனி பகவான் | 
4.       திருக்கொள்ளிக்காடு                  திருத்துறைப்பூண்டி அருகில்
5.       திருவாரூர்                         இத்தலத்தில்நவக்கிரங்கள்நேர்வரிசையில்உள்ளன. 
6.        திருச்சி                           உறையூரில் கூரை இல்லாத வெக்காளி அம்மன்   சந்நிதியின் கிழக்கே தனிச் சந்நிதியில் பொங்கு
சனி பகவான் அருள்பலிக்கிறார்.
7.   குடந்தை               நாகேஸ்வரர் கோவிலிருந்து 1 கி.மீ.
தூரத்தில்   தேப்பெருமாநல்லூர்.
இத்தலத்தின் சனி பகவான் ‘ஈஸ்வரனையே பிடித்துவிட்டேன்’ என்ற அகந்தையில் இடுப்பில்
கைவைத்துக் கொண்டு நின்ற கோலத்தில் உள்ளார்.
8.   கும்பகோணம்   
 நாச்சியார் கோவில் அருகில்
ஸ்ரீராமநாதசாமி-பர்வத வர்த்தினகோவிலில்தனிச் சந்ந்தியில் 
சனி பகவான் இரு மனைவிகளான மந்தாதேவி, ஜேஷ்டாதேவி, மகன்கள்
மாந்தி, குளிகன் 
எனகுடும்பத்துடன் காட்சி தருகிறார். அருகில் தசரத மகாராஜா சிலை
உள்ளத(நோய்தீரசனியை வேண்டுகிறார்).
9.       விழுப்புரத்தில்         திருக்கோவிலூர்- கல்பட்டு (15கி.மீ.) கிராமம் இங்குசுயம்பிரகாச
ஆசிரமத்தில் 20’ உயர சனி காட்சி தருகிறார்
10.  கும்பகோணம்                       மயிலாடுதுறை குத்தாலம்
என்றகிராமத்தில் பாதாளசனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கையில் அமிர்த       கலசம் உள்ளது. பீடம் திருப்பணி
செய்வதற்கு   தோண்டிய போது 15 அடி
தோண்டியும் பீடதின் அடிப் பகுதி தென்படாததால் அடி காண இயலாத பாதாள சனீஸ்வரர் என்ற
பெயர் உண்டு.
11.  மராட்டிய மாநிலம் சிங்கணபுரத்தில், வெட்ட
வெளியில் உயர்ந்த மேடையில்   சுயம்புவாக
எழுந்தருளியுள்ளார். கரிய நிறத்தில் 5 அடி ஒன்பது அங்குல உயரம், ஒரடி ஆறு அங்குல
அகலமும் உள்ள கல் பலகைதான் திருமேனி. இந்த ஊரினை சனிபகவான் காவல் செய்வதால்
இங்குள்ள வீடுகளுக்கு பூட்டு, கதவுகள் இல்லை எனத்தெரியவருகிறது.
   ![]()  | 
| திருவண்ணாமலை ஏறிகுப்பம் ஆரணி அருகில்  | 
![]()  | 
ஆரணி அருகில் உள்ள எந்திரம்  | 
![]()  | 
| குரு எந்திரம் | 
    காகத்திற்கு சனிதோறும் சாதத்துடன் எள்,
நல்லெண்ணை சேர்த்து வைத்தால்       சனித்தொந்தரவு
விலகும்.
தமிழ்
துதி:-         ‘சங்கடம்
தீர்க்கும் சனி பகவானே
                              மங்களம் பொங்க மனம்
வைத்தருள்வாய்
                              சச்சரவின்றி
சனீஸ்வர தேவே
                              இச்சகம் வாழ
இன்னருள் தா! தா!







அழகான பதிவு
ReplyDeleteஅற்புதமான படங்கள்
அசத்தலான விஷயங்கள்
அனைத்துமே அருமை
ஆறுதல் அளிக்கும் தலைப்பு
ஆகாசத்தில் உள்ள கிரஹங்கள்
ஆச்சர்யம் அளிக்கும் ஸ்லோகங்கள்
ஆஹா ஆஹா ஆஹா !!!
vgk
நல்ல தொகுப்பு... படங்கள் அருமை... மிக்க நன்றிங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteதுன்பங்கள் போக்கும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்!
ReplyDeleteசனி பகவான் எல்லோருக்கும் நீள் ஆயுள், நிறைசெல்வத்தை அருள்வார். அருமையான படங்கள் நல்ல விளக்கங்கள்.
ReplyDeleteநன்றி.