Pages

Monday, September 17, 2012

வந்தார் --- முடித்தார் --- சாந்தமானார் -

கீழப்பாவூர் நரசிம்மர்.


திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்ததென்பர். ஏனெனில், தன் பக்தன் பிரகலாதனைக் காக்க ஒரு நொடிப்போதில் தோன்றிய அவதாரம்! நரசிம்மருக்கென்று அமைந்த ஆலயங்கள் இந்தியாவில் பலவுண்டு. அவற்றுள் ஒன்றாகப் பழமையும் பெருமையும் கொண்டு விளங்கும் தலம் கீழப்பாவூர்.




இவ்வூரின் மேற்பகுதியில் அமைந்த குடைவரைக் கோவிலில்தான் பதினாறு கரங்களுடன் அருள்புரிகிறார் நரசிம்மர். குடைவரை அமைப்பைக் கொண்டு பார்க்கும் போது இது பல்லவர் காலத்தைச் சேர்ந்த கோவில் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மற்ற கட்டிட அமைப்புகள் சோழர் கால பாணியில் அமைந்துள்ளன. எனவே இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் என்பது தெரிகிறது.

மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரமெடுத்துப் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் அந்தத் திருக் கோலத்தைக் காண விரும்பினர் காசிபர், வருணன், ககோஷன் உள்ளிட்ட முனிவர்களும் தேவர்களும். அதற்காகக் கடுந்தவம் புரிந்தனர். அப்போது, "பொதிகை மலைச்சாரலில் மணிமுத்தாறு தீர்த்தத் திற்கு நாற்பது கல் தொலைவில் உள்ள சிந்தா நதிக்கரையில் தவம் புரியுங்கள்' என்ற அசரீரி வாக்கு கேட்டது.

அதன்படி அவர்கள் சிந்தா நதிக்கரையில் பல ஆண்டுகள் தவம் புரிய, அதன் பலனாக மகாவிஷ்ணு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பதினாறு கரங்கள் கொண்டு நரசிம்ம மூர்த்தியாக உக்கிர சொரூபத்துடன் காட்சி தந்தார். அந்தத் திருக் கோலமே கீழப்பாவூர் கோவிலில் அமைக்கப் பட்டுள்ளது.











நரசிம்மர் அவதாரம்:- சில நாழிகைகள் மட்டும். அவதரித்து பூமியில் கோலோச்சிய அவதாரம்.
 வந்தார்  --- வேலையை முடித்தார் --- சாந்தமானார்  ---  காட்சி தந்தார்  ---  வைகுந்தம் கிளம்பினார்.

நரசிம்மரை பிரதோஷகாலத்தில் ஆராதிப்பதும், செவ்வாய், புதன், சனி தினங்களில் வணங்குவதும் விக்ஷேம்.
தலம்- தென்காசி   பாவூர் சத்திரம் அருகே கீழப்பாவூர்.



கீழப்பாவூர் நரசிம்மர்














6 comments:



  1. வந்தார் --- வேலையை முடித்தார் --- சாந்தமானார் --- காட்சி தந்தார் --- வைகுந்தம் கிளம்பினார்.

    படங்களும் பதிவும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான காட்சிகளை கண்முன் கொண்டு வந்திர்கள் நன்றி எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி! பிடிய்ங்க இதை:
      [im]http://assets2.desktopnexus.com/thumbnails/1142637-thumbnail.jpg[/im]

      Delete
  3. வந்தார் --- முடித்தார் --- சாந்தமானார் -
    கீழப்பாவூர் நரசிம்மர்.

    தலைப்பு அருமை.
    படங்களில் தனிச்சிறப்பு.
    விளக்கங்கள் வெகு ஜோர்.

    இதே போல நரஸிம்ஹர் பற்றிய என் பதிவு ஒன்று நினைவுக்கு வந்தது.

    தலைப்பு:
    காவேரிக்கரையிருக்கு!
    கரைமேலே __________ இருக்கு!!

    இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

    நேரமிருந்தால் பாருங்கோ.

    தங்களின் இந்தப்பகிர்வுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள். மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.

    அன்புடன்,
    VGK

    ReplyDelete
  4. கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் - ஒருமுறை செல்ல வேண்டும்... அருமையான படங்களும் விளக்கத்திற்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  5. வந்தார் --- வேலையை முடித்தார் --- சாந்தமானார் --- காட்சி தந்தார் --- வைகுந்தம் கிளம்பினார்.//

    ஆஹா ! அருமை.
    படங்கள் எல்லாம் மிக அழகு.
    கீழ்ப்பாவூர் போக ஆசை.

    ReplyDelete