Pages

Sunday, September 16, 2012

குண்டரின் சட்டம்!!


இது ஏதோ அரசியில் சம்பந்தப்பட்டது என்று எண்ணவேண்டாம். அதற்கும் நமக்கும் வெகுதூரம்.



காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அவர்களின் பேரருள் உரைத் தொகுப்பில் “கணபதியைக் காட்டிலும் சரீரத்தில் பருமனான ஸ்வாமி வேறு யாரும் இல்லை.
சிரசு யானையின் தலை, பெரியவயிறு, பெரிய உடம்பினால் அவருக்கு ‘ஸ்தூலகாயர் என்றும் ஒருபெயர்





அந்த மஹா கணபதி தான் நாம் குறிப்பிடும் ‘குண்டர்
            காரியம் எதுவானாலும் (மற்றோரு தெய்வத்தை வேண்டுவதாயினும்) செய்பவர் யாராகினும் (மற்றோரு தெய்வமே ஆனாலும்) “துதிக்கையானைத் துதிக்காது தொட்டால் துலங்காது என்பது தான் குண்டரின் சட்டம்.
     வேறோரு தெய்வம் வரம்தர நினைத்தாலும் அது நமக்குக் கிட்ட இந்த குண்டரின் அருள் முக்கியமானது.






ஸ்ரீ பரமேஸ்வரன் திரிபுர அசுரர்களை வதம் செய்யச் செல்கையில் அவர் ஏறி வந்த தேரின் அச்சு முறிய (அச்சரபாக்கம் திண்டிவனம் அருகே உள்ள ஊர்தான்) ‘ஆகா நம் குமாரனிடம் விண்ணப்பிக்க மறந்தோமே என்று நம் குண்டரை வழிபட்டு வெற்றியடைந்தார்.













விநாயகரின் திருஉருவம் பல செய்திகளை நமக்கு கூறுகிறது. பருமனான சரீரத்தைத் தாங்கி சின்னஞ்சிறு மூஞ்சூர் மீது நர்த்தனமாடும் பொற்பாதங்களை நோக்குகையில் ‘தன் பளுவைக் காற்றிலும் லேசாக ஆக்கி ஆடும் பரப்பிரம்மம் நமது பளுவையும் லேசாக்கி அருளுவார் என்ற தன்னம்பிக்கை பிறக்கிறது. பெரியவயிற்றையும், கையில் உள்ள கொழுக்கட்டை தட்டையும் பார்க்கும் போது ஏற்படும் புன்னகையால் நம் மனவருத்தம் குறைகிறது. யானையின் முகத்தைப் பார்க்கையில் ‘எந்தக் காரியத்தையும் யானையைப் போல நிதானமாகவும், ஆனால் உறுதியுடன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.







உடைந்த தந்தத்தை பார்க்கும் போது (மகாபாரதம் எழுத தந்தத்தை உபயோகபடுத்தினார்) லட்சியத்தை அடைய எத்தகைய தியாகமும் செய்ய வேண்டும் என்ற உறுதி பிறக்கிறது. சிரசில் உள்ள பிறைச் சந்திரனைக் காணும்போது, நாளும் வளரும் பிறை போல் படிப்படியாக முன்னேற வேண்டும் என்ற உறுதி பிறக்கிறது.












எனவே “சுழி போட்டு எதையும் தொடங்குவோம்.



     “மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
       மட்டவிழ் மலர் கொடு பணிவேனே







நன்றி:- கருணைக்கடலில் சில அலைகள்
  (ஸ்ரீமகா பெரியவர்)












8 comments:

  1. படங்களும், விளக்கங்களும், குறிப்பாக அந்தத் தலைப்பும் அருமையோ அருமை.

    http://gopu1949.blogspot.in/2012/01/blog-post_29.html மஹாகணேசா மங்கள மூர்த்தி
    நேரமிருந்தால் படியுங்கோ.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இப்படிக்கு
    என் இஷ்ட தெய்வமாகிய
    குண்டர் மேல் பக்திகொண்ட,
    VGK

    ReplyDelete
    Replies
    1. உடன் படித்துவிட்டேன். நிறைய விஷயங்களைத்தெரிந்து கொண்டேன். வருட ஆரம்பத்திய பதிவு. மிக்க நன்றி. முதல் படத்தில் கண் சிமிட்டும் வினாயகரும் மகாப்பெரியவர் படமும் அருமை.

      Delete
    2. [im]http://1.bp.blogspot.com/-iC_dMKJPYUo/TxBXqWNF1kI/AAAAAAAAHsM/Wx7fmCl43DU/s1600/Birthday_of_Lord_Ganesha-Ganesh_Chaturthi-290_big.gif[/im]

      Delete
    3. மிக்க நன்றி மேடம். அந்த கண்ணடிக்கும் கலர் கலரான குண்டரை இப்படி அலாக்காகத் தூக்கி வந்து இங்கு நிறுத்தி விட்டீர்களே!

      நீங்க பலே ஆளு தான். குண்டர் சட்டத்தின் படி யாராவது உங்கள் மேல் வழக்குத் தொடுத்து விடப்போறாங்க ..... ஜாக்கிரதை. ;)))))

      [சும்மா ஒரு ஜோக்குக்காகச் சொன்னேன் மேடம்; தவறாக ஏதும் நினைத்துக் கொள்ள வேண்டாம், ப்ளீஸ்]

      Thank you very much for reading that article. vgk

      Delete
  2. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    படங்கள் செய்திகள் அருமை.

    ReplyDelete
  3. “துதிக்கையானைத் துதிக்காது தொட்டால் துலங்காது”


    துலக்கமான அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. “மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
    மட்டவிழ் மலர் கொடு பணிவேனே”


    சிறப்பான படங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. இரு நாட்கள் முன்பே சிறப்பான பகிர்வு...

    முடிவில் படம் சூப்பரோ சூப்பர்...

    ReplyDelete