Pages

Saturday, September 1, 2012

கோவில் அதிசியங்கள்


கோவில் அதிசியங்கள் 


அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும்
ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

எந்தஒரு கோவிலைப்பற்றியும் ஆதியோடந்தமாக  மணிராஜ் அவர்களின் தளத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம

                                                               http://jaghamani.blogspot.com/

My Photo


புனிதப் பயணமாக் வட நாட்டுக் கோவிலின் விபரங்களை
கோமதியரசு அவர்களின் ‘திருமதி பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்
                 http://mathysblog.blogspot.com/



தொடர்பயணமாக பலகோவில்களைப் பற்றிய விபரங்களை “துளசி தளத்தில் பல தொடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

                                                                         My Photo

                                 http://thulasidhalam.blogspot.in





ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு
உண்டு!
அவைகளில் சில:





1.  உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். -    நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம் என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர்   கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து   ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்         .





ஸ்ரீபுரம்  தங்க கோவில் 


3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.



மங்கலேச்வரர்  கோவில் 
5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.







6.  நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.






7.  ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.


ஆபத்சகாயேஸ்வரர்  ஆலயம்


8.  திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது. 




9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர்.




10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள   நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.




11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.


அகஷர்தாம்  கோவில்  டெல்லி







12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.






13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.



காளி கோவில் [கல்கத்தா ]






14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.





கோனார்க்  கோவில் 





























15. ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன் கோவிலில் குளத்தில் கல் மிதக்கும்.






                                                                                              [தொடரும்]

11 comments:

  1. சிறப்பான படங்கள்...

    முதல் மூன்று தளங்களும் அருமையான தளங்கள்...

    (இணைப்பு கொடுத்ததற்கு) புது பதிவர்களுக்கு மிகவும் உதவும்... நன்றி...

    ReplyDelete
  2. வியக்கவைக்கும் அற்புதத் தகவல்
    பகிர்வுகள்..
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. 〈img style="opacity:0.4;filter:alpha(opacity=40);" src="http://www.ecoindia.com/gifs/lotus-plant1.jpg"

      Delete
    2. 〈div style="-moz-transform: rotate(-80deg); -o-transform: rotate(-180deg); -webkit-transform: rotate(-180deg);"〉
      வணக்கம் 〈/div&#12297

      Delete
    3. 〈div style="-moz-transform: rotate(-10deg); -o-transform: rotate(-10deg); -webkit-transform: rotate(-10deg);"〉
      வணக்கம் 〈/div&#12297

      Delete
  3. பல்வேறு கோயில்கள் பற்றியும் ஆங்காங்கே உள்ள அதிசயங்கள் பற்றியும் அறியச்செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

    படங்கள் அத்தனையும் அழகோ அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. 〈span style="text-shadow: 5px 0px 7px #000;" 〉〈b〉மிக்க மகிழ்ச்சி 〈/b〉〈/span〉

      Delete
  4. //எந்த ஒரு கோவிலைப்பற்றியும் ஆதியோடந்தமாக மணிராஜ் அவர்களின் தளத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம.
    http://jaghamani.blogspot.com//உ


    அதே அதே அதே அதே அதே அதே அதே அதே அதே அதே
    அதே அதே அதே அதே அதே அதே அதே அதே அதே அதே

    ReplyDelete
  5. அதே தான்!
    [im]http://mw2.google.com/mw-panoramio/photos/medium/1630879.jpg[/im]

    ReplyDelete
  6. கோவில் அதிசியங்கள் எல்லாம் அருமை.
    என் பதிவை குறிப்பிட்டமைக்கு நன்றி.
    திருமதி . இராஜராஜேஸ்வரி அவர்கள் எந்த பதிவு எழுதினாலும் அதை சிறப்பாக செய்வார்கள்.
    நீங்களும் சிறப்பாய் செய்திகளை தொகுத்து தருகிறீர்கள்.
    நன்றி.

    ReplyDelete