கேரள பாணி கலந்து உருவாக்கப்பட்டுள்ள திருவட்டாறு
கோவிலின் நான்கு வெளிப் பிரகாரங்களிலும் 224 தூண்களில் பாவைவிளக்குகள் உள்ளன. இந்த
பாவை விளக்குகள் தீபலட்சுமி என அழைக்கப்படுகிறது.இவற்றில் ஒன்றிலிருந்து மற்றொன்று
வேறுபடிருக்கும். இந்த தூண்களில் மட்டும் 2300 சிற்பங்ககளுக்கு மேல் உள்ளன. பிரகாரம்
80 மீ.நீளம் அகலம் 6.1.0மீட்டர். இதில் ராமாயணம், பாகவதம் தொடர்பான சித்திரங்களை வடிவமைத்துள்ளனர்.
ஸீபலி
மண்டபத்தில் அபூர்வமான சிற்பங்கள் உள்ளன. கருவறையின் முன் ஒரே கல்லில் ஆன ஒற்றைக்கல்
மண்டபம் (18 x
18 ) 12ம் நூற்றாண்க்கு முந்தையது. கோவிலின்
கர்ப்பக்கிரத்தின் உள், ஒவ்வொரு புரட்டாசியுலும் 3ம் தேதி முதல் 9ம் தேதிவரையும், பங்குனி
3-9 வரையுலும் சூரியனின் செங்கதிர்கள் இறைவனின் மேல் விழும்.
திருவட்டார்
ஆதிகேசவ பெருமாள் கோவிலின் முன் பகுதி சீன பாணி கட்டடக்கலையை பிரதிபலிக்கும். ஆற்றின்
நடுவே 18 படிகளின் மேல் 3ஏக்கர் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. கருவறையில் ஐந்து
தலை ஆதிசேனின் மூன்று மடிப்பு பாம்பனையின் மேல் பெருமாள் தெற்கே தலைவைத்து வடக்கே கால்
நீட்டி மேற்கு பார்த்த நிலையில் 22அடி நீளத்திற்கு பிரம்மாண்டமாக யோக நித்திரையில்
பள்ளி கொண்டுள்ளார். தரிசனம் செய்ய ஏதுவாக கருவறை மூன்று வாசல்களுடன் உள்ளது. மூலவர்
விக்கிரகம் 16008 சாளக்கிராமம் உள்ளடங்கிய கடுசர்க்கரை கொண்ட மூலிகை படிவத்தால் ஆனது.
இதனால் அபிஷேகம் இல்லை. கோயில் விமானம் 5 கலசத்துடன் பொன்னால் வேயப்பட்டது. அடுத்துள்ளது
மார்த்தாண்ட மண்டபம். இரு மண்டபத்திலும் மரச்சிற்பங்கள் ஏராளமாக உள்ளது. மேற்கு பிரகாரத்தில்
குழல் ஏந்திய வேணுகோபாலன் அற்புதமாக காட்சி தருகிறார்.இது சோழர்கள் வேணாட்டு அரசர்கள்,
திருவாங்கூர் அரசர்கள் ஆகியவர்களால் கட்டப்பட்டுள்ளது.
நாகர்கோவிலிருந்து
30 கி.மீ. திருவனந்தபுரம் பத்மநாபசாமிக்கு முந்தையது இது. திருவட்டார் பெருமாள் மேற்கு
நோக்கி திருவனந்தபுரம் பத்மநாபசாமியைப்பார்த்தும் திரு.பத்மநாபசாமி கிழக்கு நோக்கி
திருவட்டாற்றை பாத்த நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில்
கோவில் பிரகாரம்
மன்மதன் |
கோவில் பிரகாரம்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பற்றி அருமையான படங்களும் பகிர்வும்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteதிருவட்டாறு கோவிலின் சிறப்பை சொல்லும் அருமையான பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதிருவட்டாறு கோவிலுக்கு ஒருமுறை சென்றதாக ஞாபகம்... படங்களைப் பார்த்தும் கொஞ்சம் ஞாபகம் வந்தது... நன்றி...
ReplyDeleteதிருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவில் பற்றி அருமையான படங்களும் பகிர்வும்.. பாராட்டுக்கள்..
ReplyDelete//கருவறையில் ஐந்து தலை ஆதிசேனின்
மூன்று மடிப்பு பாம்பனையின் மேல்
பெருமாள் தெற்கே தலைவைத்து
வடக்கே கால் நீட்டி
மேற்கு பார்த்த நிலையில்
22 அடி நீளத்திற்கு பிரம்மாண்டமாக
யோக நித்திரையில் பள்ளி கொண்டுள்ளார்.
தரிசனம் செய்ய ஏதுவாக
கருவறை மூன்று வாசல்களுடன் உள்ளது.
மூலவர் விக்கிரகம் 16008 சாளக்கிராமம் உள்ளடங்கிய
கடுசர்க்கரை கொண்ட மூலிகை படிவத்தால் ஆனது. //
அபூர்வமான அதிசயமான தகவல்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
[இதற்கான இணைப்பு எனக்கு மின்னஞ்சலில் வழக்கம் போல அனுப்பப்படவில்லை. அதனால் தாமதமாக வர நேர்ந்துள்ளது]