காணும்
காட்சி இரண்டு!
திருப்பதி திருமலை
ஏழுமலையானுக்குஆண்டு முழுவதும் விழா தான் என்றாலும்,
இம்மாதம்
புரட்டாசியில் நடைபெறும் பிரம்மோற்சவம்
தனி முக்கியத்துவம் வாய்ந்தது.
கீழ்திருப்பதியில்
தொடங்கி திருமலை வரையிலும் ஜொலிக்கும் மின் அலங்காரம் ஒருபுறம்,உலகிலுள்ள மலர்களையெல்லாம்
கொண்டுவந்து குவிப்பது ஒருபுறம் என பூலோக சொர்க்கம் ஆகிவிடும்.
வழக்கமாக
ஆண்டிற்கு ஒரு முறை நடத்தப் பெறும் பிரம்மோற்ஸவம் இந்த ஆண்டு இரு முறை நடக்கிறது.
புரட்டாசி நவராத்திரி பிரம்மோற்ஸவம்அக்டோபர் 14 , முதல் 23 வரை நடக்கிறது.
முன்னதாக, செப்டம்பர் 18 முதல் 26 வரை ஒரு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
விழா
நடத்தும் பிரம்மா: படைப்பு
கடவுள் பிரம்மாவால் நடத்தும் விழா என்பதால் பிரம்ம உற்ஸவம் என்று இருந்து பின்
பிரம்மோற்ஸவம் என்றானது. இப்போதும் மலையப்பசுவாமி பவனி வரும்போது பிரம்மாவின்
குட்டிதேர் முன்பாகச் செல்லும், பிரம்மாவுக்கு வழிபாடு இல்லை என்பதால், இதில் சிலை
இடம்பெறவில்லை. அரூப வடிவில் பிரம்மா இதில் காட்சியளிப்பார். சிறுவர்கள், பெண்கள்
இந்த தேரை இழுத்துச் செல்வார்கள்.
பிரம்மோற்ஸவத்திற்கு
முதல் நாள் விஷ்ணுவின் படைத்தளபதியான சேனைமுதலியார், அவரின் பரிவாரங்களான அங்கதன், அனுமன், கருடன் சகிதம் மாடவீதிகளில்
பவனி வருவார். விழா ஏற்பாடுகள் எல்லாம் முறையாக நடக்கிறதா என்று பார்த்துச்
செல்வதாக ஐதீகம். மறுநாள் கோயிலில் கருடக்கொடி ஏற்றப்படும். கருடன் கொடிமரம்
வழியாக விண்ணுலகிற்குச் சென்று தேவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகச் சொல்வர்.
முதல் நாள்
இரவு தேவியருடன் பெரிய சேஷவாகனத்தில் பவனி வந்தவர் இரண்டாம் நாள் காலை தனியாக
சின்ன சேஷவாகனத்தில் வலம் வருவார். இரவு சரஸ்வதி வேடத்தில் கையில் வீணையுடன்
வெள்ளை உடையில் அன்ன வாகனத்தில் (ஹம்ச
வாகனம்) பவனி வருவார்.
இந்த
அலங்காரத்தின் போது விவசாய மக்கள் நல்வாழ்வு வாழ விசேஷ தீபாராதனை காண்பிப்பர்.. ‘நேத்ரம்’
என்றால் ’கண்’ அன்று இரவு சர்வ லோகத்தையும் ஆளும் அரசர்கள்
தங்கள் தோள்களில் பெருமாளைச் சுமந்துவருவர் என்ற ஐதீகத்தின் அடிப்படையில், சர்வபூபாள
வாகனத்தில் பவனி வருவார். “எவ்வளவு உயர்ந்த பதவி வகிப்பவராக இருந்தாலும் எனது
அடிமை” என்று இதன் மூலம் பெருமாள் நமக்கு எடுத்துச் சொல்கிறார்.
22-09-12. ஐந்தாம் நாள் காலை மோகினிக்கோலம்.
சிவபெருமானையே
மோகத்தால் கலங்கடிக்கச் செய்த திருக்கோலத்தில் அழகே உருவாக பெருமாள் பவனி வருவார்.
இந்த கோலத்திற்கு இன்னொரு ஸ்பெஷாலிடியும் உண்டு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்
சூடிக்கொடுத்த மாலையை சூடி, அவள் பேசி மகிழ்ந்த கிளியை கையில் தாங்கி வருவார்.
அன்று இரவு பெருமாளின் அன்பு பக்தனான கருடன்
மீது அமர்ந்து பெருமாள் பவனி வருவார். இதுவே பிரம்மோற்ஸவத்தின் உச்சமான நாள்.
மூலவருக்குரிய மகரகண்டி, லட்சுமி ஆரம் என்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள ஆபரணங்கள்
இந்த நாளில் தான் மலையப்பசுவாமிக்கு அணிவிக்கப்படும். மூலவரையே தரிசிப்பதாக எண்ணி
லட்சக்கணக்கான பக்தர்கள் இந்நாளில் இன்று சேர்வர்.
24-9-12
காலை சூரியபிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும்
காட்சி தருவார்.
25-9-12 காலை
ரதௌற்சவம்; இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் பவனி வருவார்
26-9-12ஒன்பதாம்
நாள் சுவாமி புஷ்கரணியில் சக்ரஸ்நானம்
நடக்கும். சுவாமியுடன் சேர்ந்து புனிதமான குளத்தில் நீராடி மகிழ்வர். அன்று மாலையே
கோயிலில் கொடி இறக்கப்படும்.
ஐந்தாம் நாள்
நடைபெறும் கருடோஸ்வதுக்கும் எட்டாம் நாள் நடைபெறும் ரத உற்சவமும் மிகவும்
முக்கியமானது. இதனைக்காண கண்கள் இரண்டு மட்டும் போதாது.
[படங்கள் உதவி: தினமலர்]
மிகவும் அழகான பதிவு
ReplyDeleteஅசத்தலான படங்கள்
அற்புதமான விளக்கங்கள்.
எல்லாமே ஜோர் ஜோர்.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன்
vgk
நேரில் சென்று வந்தது போல் படங்களும் பதிவும் அருமை... நன்றி...
ReplyDelete