தமிழ்
அந்த காலத்தில் பள்ளி தமிழ் பாடத்தில் அவ்வையார், கவி காளமேகம்
மற்றும் இரட்டைப்புலவர்கள் பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.
அவர்களைப்பற்றிய சிறு குறிப்பு:
கவி காளமேகம்
காளமேகம் 15 ஆம் நுற்றாண்டில்
வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த
இவர்,திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த
மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி
சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் வசைப்
பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம்
மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடியசிலேடைப் பாடல்களும்,
நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர்
இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.
திருவானைக்கா
உலா, சரஸ்வதி
மாலை, பரப்பிரம்ம
விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய
நூல்களாகும்.
பெயர்க் காரணம்
திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல்
செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற
பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று
கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர
படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல்
திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு
பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி
அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன்
வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன்
(காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காதலி
தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால்
கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என
மாறிற்று.
சிலேடைப் பாடல்:
நஞ்சிருக்கும் தோலுரிக்கும்
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன்
முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது -
விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்
என்கிற காளமேகப் புலவரின் பாடல் பாம்பிற்கும்
வாழைப்பழத்திற்கும் சிலேடையாக அமைக்கப்பட்டிருக்கிறது
வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத,சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே
“பெருமாளும் நல்ல
பெருமாள்,அவர் தம்
திருநாளும் நல்ல திருநாள்-பெருமாள்
இருந்த இடத்தில் இராமையினால் ஐயோ
பருந்தெடுத்துப் போகுதே பார்.”
“காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது
நீரென்று பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.”
இருந்த இடத்தில் இராமையினால் ஐயோ
பருந்தெடுத்துப் போகுதே பார்.”
“காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது
நீரென்று பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.”
============================================
இரட்டைப்புலவர் அல்லது இரட்டையர் எனப்படுவோர் கிபி 14ம்
நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில்
ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும்
சொல்லப்படுகிறது. இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோழ்களில்
சுமந்து நடப்பார் என்றும், கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்தி செல்வார் என்றும்
பண்டைய கால சுவடுகள் தெரிவிக்கின்றன.இவர்கள் சிலேடையைப் பாடுவதில் வல்லவராவர்.
முன்னீரடிகளையும் ஒருவர் பாடப் பின்னீரடிகளையும் மற்றவர் பாடி
முடிப்பர்.
குன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து
சென்று திரிவதென்றுந் தீராதோ-ஒங்றுங்
கொடாதானைக் காவென்றுங் கோவென்றுங் கூறின்
இடாதோ நமக்கிவ் விடர்
அத்தை மகன்குரு டம்மான் மகன்முட மாகிக்கீழ்மேல்
ஒத்துறைந் தேகூறு பாடோ(டு) அணிகொள் உலப்பில்கவி
முத்தரில் ஓதிஏ கம்பர் உலாமுன் மொழிந்தவரும்
சித்தம் உவப்பத் திரிந்தோர்செங் குந்த சிலாக்கியரே
ஒளவையார் பொன்மொழிகள்
" நன்றி ஒருவற்குச் செய்தக்காலந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலாயாலே தான் தருதலால்"
இதுபொன்ற பாடல்கள் நல்லொழுக்கத்தினை கற்றுத்தந்தது. மேலும்
தமிழும் நன்கு வளர்ந்தது.இப்பொழுது பாடத்திட்டதில் இல்லை.
இப்பொழுது நம் போன்ற தமிழ் இணைய வலைப்பதிவாளர்களால் தான் தமிழ்
ஓரளவு வாழ்ந்து கொண்டிருக்கிறது. இல்லைஎனில் பாரதி கூறியது போல் “தமிழ் இனி மெல்ல
சா…--.
தமிழ் இனி வாழும் ..
ReplyDeleteஇனிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
மிகவும் அருமையான பதிவு.
ReplyDeleteஅற்புதமான விளக்கங்கள்.
எப்போதோ படித்து கேள்விப்பட்ட விஷயங்கள், மறந்து போகாமல் நினைவுப்படுத்தியுள்ளது, மிகச்சிறப்பு.
எழுத்தின் அளவுகள் தங்கள் மனஸு போலவே மிகப்பெரியதாக உள்ளதால், பதிவு திறக்க நேரம் ஆகிறது. பிறகு அவற்றை ஒவ்வொரு வரியாக Left to Right படிக்கவும் சற்றே சிரமமாக உள்ளது.
BOLD LETTERS இல் ஆனால் NORMAL FONT இல் கொடுத்தால் நல்லது.
பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன்,
vgk
சிறப்பான பகிர்வு... (ஐயா சொன்னது போல் செய்தால் சிரமம் இருக்காது)
ReplyDeleteநல்ல தமிழ் பதிவு. கவிகாளமேகம், இரட்டைபுல்வர்கள் பற்றி திரு வை. கோ அவர்கள் சொன்ன மாதிரி பள்ளியில் படித்தது மீண்டும் நினைவு படுத்திக் கொண்டோம்.
ReplyDeleteநன்றி.