Pages

Tuesday, September 25, 2012

மாப்பிள்ளை படும் பாடு!


நெல்லைப் பக்கம் புதுமாப்பிள்ளைக்கு நடக்கும் விருந்து வகைகளில்

ஒரு நாள் உணவில் இந்த மாப்பிள்ளை சொதி கட்டாயம் இடம் பெறும்.


மாப்பிள்ளை சொதி செய்யும் முறை:-- தேவையான பொருட்கள்: 1. தேங்காய்-2. 2.சிறு பருப்பு (பாசிப் பருப்பு)-300 GM. 3.உருளை கிழங்ககுகேரட்பீன்ஸ் , முருங்காய்சி.வெங்காயம் தலா ஒரு கப்பட்டை,லவங்கம்பூண்டு,  சோம்பு அகியவை சிறிதளவுஇஞ்சி சாறுஎலிமிச்சை சாறு ஒரு டேபில் ஸ்பூன்பச்சை மிளகாய் 8-10, நெய் மற்றும் உப்புதேவையான அளவு.
























மாப்பிள்ளை சொதி தயாரிக்கும் முறை:

முதலில் பாசிப்பருப்பை வேகவைக்கவும்தேங்காயினை உடைத்து துருவி மிக்சியில் இட்டு அரைத்து பால் எடுக்கவும்இது மிக வும் திக்காக இருக்கும்.பின் திரும்பவும் சிறிது நீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும் . மீண்டும் நீர் சேர்த்து மூன்றாவது பால் எடுக்கவும்எடுத்த மூன்று பால்களையும் தனித்தனியாக பாத்திரத்தில் வைக்கவும்காய்களை நீளவாக்கில் சற்று பெரிய துண்டுகளாக வறுக்கவும்மிளகாயினை நீளமாக கீறி வைக்கவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டுபட்டைசோம்புலவங்கம் போட்டு சிவந்ததும் நறுக்கிய காய்களை போட்டு நன்கு
வதக்கவும்.  தேவைஆன அளவு உப்பினை சேர்க்கவும்.பின் மூன்றாவது தேங்காய் பால் விட்டு நன்றாக வேகவிடவும்வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்துஅத்துடன் இரண்டாவது எடுத்த பால் சேர்த்து லேசாக கொதிக்கவிடவும்அதிகசூட்டில் கொதிக்க வைத்தால் தேங்காய் பால் திரிந்துவிடும்மேல்கொண்டு இஞ்சி சாறினை சேர்க்கவும்பின் முதல் பாலினை சேர்த்துஎலுமிச்சை சாறினை சேர்க்கவும்உடன் அடுப்பில் இருந்து இறக்கவும்தேவையானால் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்.
இது தான் "மாப்பிள்ளை சொதி". நெல்லை சீமையில் இது மிகவும் பிரசித்தம்புது மாப்பிள்ளை மாமியார் வீட்டிற்கு வரும் போது இதனை கட்டாயம் செய்வதால் "மாப்பிள்ளை சொதிஎன்று பெயர்தவறினால், 'என்ன வே ஒரு சொதி செய்து போடலே'  என கேலிப்பேச்சுக்கு ஆளாக நேரிடும்.
அன்புடன்,

7 comments:

  1. //இது தான் "மாப்பிள்ளை சொதி". நெல்லை சீமையில் இது மிகவும் பிரசித்தம்.

    புது மாப்பிள்ளை மாமியார் வீட்டிற்கு வரும் போது இதனை கட்டாயம் செய்வதால் "மாப்பிள்ளை சொதி" என்று பெயர்.

    தவறினால், 'என்ன வே ஒரு சொதி செய்து போடலே' என கேலிப்பேச்சுக்கு ஆளாக நேரிடும்.//

    இதுவரை கேள்விப்படாத புதிய செய்தியாக உள்ளது.

    நல்லவேளையாக நான் நெல்லைச் சீமையின் மாப்பிள்ளையாக இல்லாது போனேன். சொதி பிடிக்காமல் போனான் மாப்பிள்ளையின் கதி????? ;))

    நல்ல பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    vgk

    ReplyDelete
  2. தேங்காய் மூடி, தேங்காய்ப் பால், வெங்காய் மற்றும் இதர காய்கறிகள் யாவும் ஃப்ரெஷ் ஆகக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

    இங்கு எங்கள் பக்கமெல்லாம் புதிதாகத் திருமணம் ஆன மாப்பிள்ளையை ஆடி ஒண்ணாம் தேதி மாமியார் வீட்டுக்கு அழைத்து விருந்து சாப்பாடு போட்டு, பொண்ணு மாப்பிள்ளைக்கு புதுத்துணிகள் எடுத்துக்கொடுத்து, வெள்ளியில் நினைவுப்பொருட்கள் என்று ஏதேதோ கொடுத்து அனுப்புவார்கள். போளி, வடை, பாயஸம் முதலியனவற்றிடன் அன்றைய விருந்து தடபுடலாக இருக்கும்.

    ”ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து அடி”

    என்று விளையாட்டாக ஓர் பழமொழி போலவும் சொல்வார்கள்.

    ReplyDelete
  3. நெல்லையில் திருமணம் முடிந்த மறுநாள் சொதி சாப்பாடு சாப்பிட்டு போக வேண்டும் என்று திருமணத்திற்கு வந்தவர்களை கேட்டுக் கொள்வார்கள்.
    காலையில் பலகாரபந்தி அதில் நிறைய பலகாரங்கள் பரிமாறபடும்.அதில் என்ன பலகாரம் பரிமாற பட்டதோ அத்தனையும் மாப்பிள்ளையின் சகோதரிக்கு டப்பாக்களில் எடுத்து வைக்கப் பட்டு இருக்கும். சகோதரிபார்த்து திருப்திது பட்டு சாப்பிடலாம் என்ற பின் தான் எல்லோரும் சாப்பிடுவார்கள்.
    பின் மதியம் சொதி சாப்பாடு, இஞ்சி துவையல் அல்லது இஞ்சி பச்சடி, வாழைக்காய் வறுவல், அடைபிரதமன் எல்லாம் முக்கியமாக இடம் பெறும்.
    நீங்கள் சொன்னது போல் பட்டை, இலவங்கம் இல்லாமல் சொதி செய்வார்கள் எங்கள் வீடுகளில்.
    வீட்டுக்கு விருந்தினர் வந்தாலும் ஒருநாள், சொதி, கூட்டாஞ்சோறு, உளுந்தபருப்பு சாதம் இவை எல்லாம் சிறப்பு உணவுகள் என்று செய்யப்படும்.
    படங்களும், பகிர்வும் அருமை.

    ReplyDelete
  4. மாப்பிள்ளை வந்தால்தான் செய்து போடுவீர்களா? நாங்கள் வந்தா செய்து போடமாட்டீர்களா??????????

    ReplyDelete
  5. முதல் வருகைக்கு நன்றி! உங்களுக்கில்லாததா?
    [im]http://3.bp.blogspot.com/-KDm4dZOt5A8/TrHa98dv0FI/AAAAAAAABw4/2DBUztcC698/s400/v6.jpg[/im]

    ReplyDelete
  6. செய்து பார்த்திடுவோம்...

    நன்றி சகோ...

    ReplyDelete
  7. மாப்பிள்ளை சொதி -- வேடிக்கை விருந்து...

    ReplyDelete