Pages

Saturday, September 22, 2012

காற்றாகும் உடல்


தெரிந்தவர் இல்லத்திருமணம் கும்பகோணத்தில் வைத்து நடைபெற்றது. வந்தே ஆக வேண்டும் என வருந்தி அழைத்ததால் அவர்கள் இல்லத்திருமணத்தில் கலந்து கொண்டோம்.
        கும்பகோணம் கோவில்களுக்கு குறைவில்லாத நகரம் ஆதலால் மூன்று தினங்கள் போல்அங்குதங்கி முக்கியமான ஆலயங்களை தரிசித்து வந்தோம்.
 அவை:           திருமீயச்சூர் லலிதாம்பிகை
                        திருவாரூர் தியாகராஜர்
                        நாச்சியார் கோவில்
                        பட்டீஸ்ரம் துர்க்கை அம்மன்
                        தாராசுரம் (புகழ் பெற்ற சிற்பங்கள் நிறைந்தது)
கும்பகோணம் மற்றும் மகாமகக் குளத்துக் கரையில்
உள்ள சப்தமாதர் ஆலயம்
                        சாரங்கபாணி கோவில் மற்றும் அருகில் பிரம்மன் கோவில்
                        ஆலங்குடி குருபகவான் மற்றும் திருச்சி அருகில் உள்ள திருப்பட்டூர்
                        பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்




மகாமகக்குளம்

நாங்கள் சென்ற நாட்கள் இடைவிடாத மழை. கொட்டும் மழையில் எந்த ஒரு கூட்டமும் நெருக்கடியும் இல்லாமல் உடலும் மனமும் குளிர ஸ்ரீலலிதாம்பிகை தரிசனம் கிடைத்தது. ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில், சிவன்பார்வதி சிலை பிரமிக்க வைக்கும் கலை அம்சம் கொண்டது. அம்மனின் முகத்தை ஒருபுறம் பார்த்தால் கோபம் கொப்பளிக்கும் தோற்றம் தெரியும். அம்பாளை சாந்தப்படுத்த வேண்டி சிவனார் அம்மனின் முகவாயை தொட்டு சாந்தப்படுத்துக் தோற்றத்தில் சிறிது நகர்ந்து  அம்மனைப் பார்த்தால் சாந்தம் தவழும் அம்மனின் முகம் காட்சி அளிக்கும்.







வெளிப்பிரகாரம்





கலையழகு கொஞ்சும் சிற்பம்




திருமீயச்சூர் கர்ப்பகிரகம் [கஜபிருஷ்டம்]






திருவாரூர் தியாகராஜரையும் கொட்டுக் மழையில் தரிசித்தோம் (பார்க்க படம்) இக்கோவிலில் நவக்கிரகங்களின் சன்னதி ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பது விசேஷம். நாங்கள் சென்ற சமயம் திருக்குளத்தில் நீர் தளும்பி நின்றது.


 சுப்பிரமணியர்

சிவபார்வதி

 நேர்கோட்டில் நவக்கிரகங்கள்





திருவாரூர் கோவில் [மழையில்]


திருவாரூர்  தெப்பக்குளம்




நாச்சியார் கோவில்

கல் கருட சேவையின் போது ஒரு அற்புதம் நடைபெறுகின்றது. அதாவது கருடனின் கனம் (எடை) அதிகமாகிக்கொண்டே போவதுதான். சன்னதியிலிருந்து வெளியே வரும்போது கருடனை நான்கு பேரால் ஏழப்பண்ண முடியும் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு என்று நான்கின் மடங்கில் அதிகமாகிகொண்டே போகும் அதிசயம் நடைபெறும், அதே பெருமாள் திரும்பி வரும் போது அதே விகிதத்தில் எடை குறைந்து கொண்டே வரும்.




நாச்சியார் கோவில் கல்கருடன்








நாச்சியார் கோவில் கல் கருடன் மிகவும் விசேஷமானது. இது நமக்கு உணர்த்தும் பாடம்இறைவன் சன்னதியில் நமது உடலும் மனமும் காற்றைப்போல் லேசாகிவிடுகிறது. சன்னதியை விட்டு வெளியே வந்ததும் மீண்டும் லெளகீக விஷயங்களால் நமது உடலும் மற்றும் மன அழுத்தத்தினால் இதயமும் கனத்து விடுகிறது என்பதே





தாராசுரம்  கோவில்

தாராசுரம்  கோவில்



தாராசுரம்  அர்த்தனாரீஸ்வரர்

தாராசுரம் கல்தேர்




பட்டீஸ்வரம் 


பட்டீஸ்வரம் துர்க்கை 

திருச்சி அருகில் 20 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருப்பட்டூர் தலம். விதி இருப்பின் விதியை மாற்றி அருளும் பிரம்மாவின் திருத்தலமாகும். கோவிலின் உள்ளே சிறிது தொலைவில் உள்ள நந்தி மற்றும் மண்டபம் ஒரே கல்லில் ஆனது.

திருப்பட்டூர்  பிரம்மா



திருப்பட்டூர் நந்தி





10 comments:

  1. படிக்கப் படிக்கத் தெவிட்டாத விஷயங்கள். திரும்பவும் படிக்கத் தோன்றுகிறது. அருமையாக இருக்கிறது.

    ReplyDelete
  2. அழகான படங்களுடன் அருமையான பதிவு.

    நான் சமீபத்தில் 12.09.2012 அன்று திருபட்டூர் பிரும்மா கோயிலுக்குச் சென்று தரிஸித்து வந்தேன்.

    கும்பகோணத்தில் உள்ள அனைத்துக் கோயில்களும், ஆலங்குடி உள்பட அனைத்து நவக்கிரஹ ஸ்தலங்களும் போய் வந்துள்ளேன். நாச்சியார் கோயிலுக்கும் போய் வந்துள்ளேன்.

    அழகான அருமையான நினைவலைகளைத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். VGK

    ReplyDelete
  3. நான் இன்னக்குதான் உங்க பக்கம் வரேன் இவ்வளவு நாள் எப்படி பாக்காம இருந்தேன்னு தெரியல்லே. படங்கலும் பகிர்வும் ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துகள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி. பிடியுங்க இதை!
      [im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/001S052_gnm-1.gif[/im]

      Delete
  4. Hi Thamari Madurai, Thanks for visiting My Hobby Lounge to view Mira's Talent Gallery.

    Nice blog and the name is lovely. Detailed post has took me to the the temple as if I have accompanied you through the journey.

    Invite you to view my recent post on Ganeshotsav celebrations....

    Ganehotsav Celebrations

    ReplyDelete
    Replies
    1. [im]http://positivepsychologynews.com/ppnd_wp/wp-content/uploads/2008/12/thank-you-bodies.jpg[/im]

      Delete
  5. படங்களும் பகிர்வும் மிக அருமை. குறிப்பாகத் தாராசுரம் கோவில் கோபுரப் படங்கள், திருப்பட்டூர் நந்தி ஆகியன மிக அழகு.

    ReplyDelete
  6. எல்லா படங்களும் அருமை.
    ஆன்மீக பயணம் , திருமண விழா எல்லாம் சிறப்பாய் முடித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. திருப்பட்டூர் மட்டும் பார்க்கவில்லை பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  7. படங்கள் எல்லாம் கோவிலை சுற்றி வந்தது போல் இருந்தது...

    இத்தனையும் பதிவில் தரவேற்றம் செய்ய எவ்வளவு சிரமம் என்பதும் தெரியும்... பாராட்டுக்கள்...

    மிக்க நன்றிங்க...

    ReplyDelete
  8. அழகான பூங்கொத்துகளுக்கு நன்றி

    ReplyDelete