பத்து பேரின் பந்தாட்டம்!
தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ‘கால் பந்தாட்டம்’ பற்றி
கூறுகிறேன் என்று நினைக்காதீர்கள்! நான் சொல்ல வந்தது திருமலையின் பந்தாட்டம் பற்றி!
நாம் சுமாராக ஒரு நாளிக்கு 6 முதல் 8 மணி நேரம்
உறங்குகிறோம். ஆனால் திருமலையின் வேங்ககடவனோ ஒரு நாள் பொழுதில் ஓய்வு எடுக்கும் நேரம்
வெறும் ஒண்ணறை மணி (1.5 ) நேரம் தான்!
குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்கும் வரை ‘கடன் பெற்றார்
நெஞ்சம் போல’ உறக்கமும்
வராது அல்லவா? பிரதி தினமும் கணக்கிடமுடியாதபடி பக்தர்கள் வேங்ககடவனை தரிசிக்கும் நேரம்
ஒரு இமைப்பொழுது (செகண்ட்) என வைத்துக் கொண்டாலும் எவ்வளவு பக்தர்கள் ஒரு நாளில் தரிசிப்பார்கள்
என பார்ப்போமா?
ஒரு நாள் = 24
மணி
திருவேங்கடவன்
ஓய்வுகாலம் = ஒண்ணறை மணி (1.5)
மீதி
உள்ள நேரம் = 22.5 மணி
நிமிடத்தில் 22.5 x 60 = 1,350.0 நிமிடங்கள்
நொடியில் 1350 x 60 =81,000 நொடிகள்
ஒருவர் தரிசிக்க அனுமதிக்கும் காலம்
ஒரு இமைப் பொழுது [ஒரு நொடி] என வைத்துக் கொண்டாலும் ஒரு நாளைக்கு 81,000 நபர் தான்
திரு வேங்கடவனை தரிசிக்க இயலும்.
தினமும் பக்தர்கள் கூட்டம் லட்சத்தைத
தாண்டும் போது தான் தரிசன காலம் 12 மணி நேரம், 16 மணி நேரம் என ஆகுகிறது.
அதனால் தான் பிரகாரத்தின் உள்
நாம் நுழைந்து வேங்ககடவனை தரிசித்து வெளியே வருவதற்குள் பத்து சேவார்த்திகளால் பந்தாடப்படுகிறோம்
இருப்பினும் வெளியே வரும் போது உடலும் மனதும் காற்றைப்
போல், வானத்தில் பறப்பது போல், ஆகி விடுகிறது.
மூலஸ்தானத்தில் நம்மால் எந்த வேண்டுதலும் செய்ய
வேண்டிய அவசியம் நேராமல் மனம் நிறைந்து விடுகிறது.
மனதில் குறையொன்றும் இல்லாமல் நிறைவாக இருப்பதால்,
பிரகாரத்தின் வடபுறம் மேல் உள்ள தங்கவிமானத்தில் எழுந்திருக்கும் ‘வேண்டுதல் வெங்ககடேசனை’ தரிசித்து
வேண்டிக் கொள்ள அமைந்திருக்கும் மரப்படிக்கட்டு மேடையில் நின்று தரிசிக்கும் போதும்
ஏதும் வேண்டிக் கொள்ள தோன்றுவதில்லை.
“மறை ஓதும் ஞானிகள் மட்டுமே
காண முடியும் என்றாலும் குறை ஒன்றும் இல்லை”
பத்து பேரின் பந்தாட்டம்!
ReplyDelete=======================
மிகவும் அழகிய பதிவு.
அற்புத்மான படங்கள்.
அசத்தலான விளக்கங்கள்.
-oOo-
அந்தப் பத்துபேர்கள் யார் யார்?
அவர்கள் எவ்வாறு நம்மைப்
பந்தாடுகிறார்கள் என்பதையும்
நகைச்சுவையுடன் விவரித்திருக்கலாம்.
இருப்பினும் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.
பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.
vgk.
படங்களும் பதிவும் மெய் சிலர்க்க வைக்கின்றன... நன்றி...
ReplyDeleteவேங்ககடவனை தரிசித்து வெளியே வருவதற்குள் பத்து சேவார்த்திகளால் பந்தாடப்படுகிறோம்//
ReplyDeleteஆம், நீங்கள் சொல்வது உண்மைதான்.
Gopalakrishnan Vai. Sep 11 (1 day ago) to me ஜொலிக்கும் தங்க கோபுரமும், யானைகள் ஊர்வலமும் வெகு சிறப்பாகப் [கலர் கலராக கலக்கலாகப்] படமாக்கிக் காட்டப்பட்டுள்ளன. அருமையோ அருமை. பாராட்டுக்கள். vgk
ReplyDelete