சக்தி தரிசனம்
பெண்ணாகப் பிறந்தவள், பல பருவங்களைக் கடக்கிறாள்
1.பேதை 2.பெதும்பை 3.மங்கை 4.மடந்தை 5.அரிவை 6.தெரிவை 7.பேரிளம் பெண் என்பது அந்த பருவங்கள். இக்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்க வல்ல தலங்கள் தஞ்சை மாவட்டதில் உள்ளது.
தட்சணின் யாகதிற்கு சென்ற பார்வதி அவமானப்பட்டு ஹோமக்கினியில் விழுந்த போது, அவளின் அவயங்கள் வீழ்ந்த இடம் சக்தி பீடமாக போற்றப்படுகிறது. பிறகு சிவபெருமான் மன்னித்து சிவ தரிசனத்தைக் காட்டியபோது, அந்த தரிசனத்தில் சக்தியால் சிவனுக்கே உரிய 7 வித சிவச் சின்னங்களை தரிசிக்க இயலவில்லை.
அவை 1.சிவனாரின் சிரசில் உள்ள கங்காதேவி 2.மூன்றாம் பிறை
3. நெற்றிக்கண் 4. கழுத்தை சுற்றி இருக்கும் நாகம் 5. உடுக்கை 6.திரிசூலம் 7.திருக்கழல் இவைகளை தரிசிக்காமல் துன்பப்பட்டாள்.
சக்தியின் சோகத்தை அறிந்த சப்தமாதர்கள், பூவுலகில் பெண்களுக்கு அருளக்கூடிய 7 திருத்தலங்களை எடுத்துரைத்தனர்.
கணவரை முழுமையாக அறிந்து உணர்ந்தால் தானே அவருக்கு இணையாகவும் துணையாகவும் கருத்தொருமித்து வாழமுடியும், என்பதை உணர்ந்த பார்வதிதேவி பூவுலகுவந்தாள்.
சப்தமங்கையர்கள் வழிபட்ட 7 தலங்களும் சென்ற தேவி சிவனாரை நினைத்து தவமிருந்தாள். ஒவ்வொரு தலத்திற்கும் சென்று சிவனைவழிபட வழிபட
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம் பெண் என்ற ஏழுநிலைகளில் தன்னைத் தானே கண்டு சிலிர்த்துப் போனாள். நிறைவில் 7 சிவச்சின்னங்களுடன் சிவபெருமான் தேவிக்குக் காட்சி அளித்தார்.
அந்த எழு ஸ்தலங்கள்:-
இந்த ஏழு தலங்களில் இறைவனைவணங்கினால் ஒவ்வொரு தலத்திலும் பெண்ணின் ஒவ்வொரு பருவத்தின் உருவத்தில் இறைவி காட்சி தருவாள். நிறைவு நாளில் 7 பருவங்களுடன் 7 தேவியருடன் சிவபெருமான் விஸ்வரூபமாக காட்சி அளிப்பார்.
1. சிவ நேத்திர தரிசனம்:- சக்கரமங்கை-சக்கரப்பள்ளி, தஞ்சை-கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது சக்கரப்பள்ளி, தேவி பிராம்மியாக வழிபட்ட தலம். பார்வதி சிவனின் நெற்றிக்கண்ணை தரிசித்த தலம். மாகவிஷ்ணு சக்ராயுதத்தைப் பெற்ற தலம். அம்பிகை சக்கரவாகப் பறவை வடிவத்தில் வழிபட்டாள். ஸ்வாமி- ஸ்ரீசக்ரபாகேஸ்வரர், அம்பாள்-ஸ்ரீதேவநாயகி, வணங்கும் தினம்-அமாவாசை கழிந்த பிரதமை.
1. கங்கா தரிசனம்:- அரிமங்கை – அரிமங்கை. அய்யம்பேட்டை கோயிலடி பேருந்து நிலையத்தில் இருந்து 2கி.மீ. தொலைவில் உள்ளது அரிமங்கை, பார்வதி சுயம்புமூர்த்தத்தை வழிபட சிவ, கங்கை தரிசனம் கிடைக்கப் பெற்றாள். (துவிதிதை)
1. திரிசூல தரிசனம்:- சூல மங்கை- சூலமங்கலம் அய்யம்பேட்டையிலிருந்து 1 கி.மீ. தூரம். திருதியை நாளில் கெளமாரி வணங்கி அருள் பெற்றாள். சுயம்பு மூர்த்தத்தை தொழ பார்வதி திரிசூல தரிசனம் பெற்றாள். ஸ்வாமி கீர்த்திவாகீஸ்வரர், அம்பாள்- ஸ்ரீ அலங்காரவல்லி. (திருதியை)
1. திரிகழல் தரிசனம்:- நந்திமங்கை- நந்திமங்கை, அய்யம்பேட்டையை அடுத்துள்ள நல்லிசேரி. சப்தமாதாக்களில் ஒருவரான வைஷ்ணவிதேவி, சிவனாரை தொழுது அருள் பெற்ற ஸ்தலம். பார்வதிக்கு திருக்கழல் தரிசனம் அருளப்பெற்ற ஸ்தலம். ஸ்வாமி ஜம்புகேஸ்வரர் அம்பாள்
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி.
1. உடுக்கை தரிசனம்:- பசுமங்கை- பசுமங்கை, தஞ்சை பாவநாசம் வழித்தடத்தில் பசுபதிக்கோயில் காமதேனு, மற்றும் வராஹி அம்மன் வழிபட்டதலம். பார்வதி வழிபட்டு சிவனின் உடுக்கை தரிசனம் கிடைக்கப்பெற்ற தலம். ஸ்வாமி பசுபதீஸ்வரர். அம்மன் பால்வள நாயகி.
1.
பிறை தரிசனம்:- தாழமங்கை- பசுவதி கோயிலுக்கு அருகில் 1கி.மீ. இந்திராணி என்னும் மகேந்திரி வழிபட்டதலம். உமையவள் தவம் செய்து மூன்றாம் பிறையுடன் சிவனை தரிசித்த தலம். சுவாமி-சந்திரமெளலீஸ்வரர். அம்பாள்-ராஜராஜேஸ்வரி. ராஜராஜேஸ்வரி. என்ற திருநாமத்துடன் அம்பிகை அருள் பாலிக்கும் தலங்கள் மிகக்குறைவு. மூன்றாம் பிறை நாளில் வழிபட்டால் குடும்பத்தில் சாந்தம் குடி கொள்ளும்.
1. நாகதரிசனம்:- திருப்புள்ள மங்கை- பசுபதி கோவிலுக்கு அருகில் 1கி.மீ. தொலைவில் உள்ளது. சாமுண்டிதேவி, அஷ்டநாகமூர்த்திகளுடன் வழிபட்டதலம். பார்வதிக்கு சிவன் கழுத்தில் நாகாபரணத்துடன் காட்சி தந்தாள். பிரம்மபுரீஸ்வரம்- அம்பாள்-அல்லியங்கோதை. நாகதோஷம் நிங்கும். இந்த 7 தலங்களையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்.
சிறுமி, கல்லூரி மாணவி, திருமணத்திற்கு காத்திருக்கும் பெண், குழந்தை ஈன்றெடுத்தவர், மகன் அல்ல்லது மகளுக்கு திருமணம் செய்யும் நிலையில் உள்ளவர், பேரன் பேத்திகளை கொஞ்சி மகிழ்ந்தவர் என எந்த வயதினாராயினும், பெண்கள் இந்த 7 ஸ்தலகளையும் தரிசனம் செய்தால் குறையின்றி நிறைவாழ்வு பெறுவர்.