Pages

Saturday, August 11, 2012

பல் படுத்தும் பாடு

                                                           நாம் நம் உடலில்உண்டாகும் எந்த வலியையும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல் வலியை மட்டும் தாங்க முடியாது. மற்ற உறுப்புகள் வலிக்கும் போது பல்லைக் கடித்து கொண்டு பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் பல்லே வலிக்கும் போது ? (  !  )
          


                                     நாங்கள் திரு நெல்வேலியில் வசித்த போது இப்படிதான் என் கணவர் அவர்கள் அலுவக நண்பர்களுடன் அருகாமையில் உள்ள குற்றாலத்திற்கு சென்றார். நெல்லையைச் சுற்றி பல சுற்றுலாத்தலங்கள் உள்ளன.நெல்லையை மையமாகக் கொண்டு கிழக்கில் இருந்து பார்த்தோமானால் திருச்செந்தூர் செல்லும் வழியிலேயே புகழ் பெற்ற ஸ்ரீவைகுந்தம்,கிருஷ்ணவரம் சிற்பங்கள் நிறைந்த கோயில்

                                நவக்கைலாசங்கள்,நவதிருப்பதி கோயில்கள்,தெற்கே கன்னியாகுமரி,எழில்மிகு தானுமாலய ஸ்வாமி அமைந்துள்ள சுசீந்தரம் நாகர் கோயில்,ஆசியாவிலே உயரமான மாத்தூர் தொட்டிபாலம்,திற்பிரப்புநீர்விழ்ச்சி  பேச்சிப்பாறைஅணை,தென்மேற்கே [SILENT VALLEY]எனப்படும் களக்காடு,பாயிற்கு புகழ் பெற்றபத்தமடை,அப்பளத்திற்கு பெயர் போன     கல்லிடைக்குறிச்சி,மணிமுத்தாறுஅணை,பாபநாசம்,பாணதீர்த்தம்அகத்தியர்அருவி,மேற்கே குற்றாலம்,வடமேற்கே  சங்கரன்கோவில்,திருவில்லிபுத்தூர் வடக்கே மணக்கும் மீனாட்சி ஆளும்மதுரை எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் மற்றும் ஆன்மீகத்தலங்கள் உள்ளன.

சரி நாம் கதைக்கு வருவோம்



குற்றால அருவி + குற்றால நாதர் கோவில் 

      குற்றாலம் ஒரு அருமையான இயற்கை கொஞ்சும் ரம்மியமான பசுமை மலைகள் சூழ்ந்த சொர்க பூமி. மே மாதம் தொடங்கி,செப்டம்பர் வரை அனைத்து அருவிகளிலும் மூலிகை நீர் கொட்டும் அழகே அழகு. குற்றாலச் சாரலில் திளைப்பது அருவிகளில் குளிப்பதைப் போல சுகமானது.
பொதுவாக நெல்லை வாழ் மக்களுக்கு சாரல் சீசன் தொடங்கும்போதே இங்கு தெரிந்து விடும். பொதிகைமலையின் குளிர்ந்த காற்று சிறுசாரலுடன் வரும். வானம் மப்பும் மந்தரமுமாக இருக்கும். சீசனின் ஆரம்பகாலத்தில் சிலசமயம் கற்கள் அடித்து வரப்படும். அந்நேரத்தில் அருவிகளில் குளிப்பது மிகுந்த ஆபத்தினை உருவாக்கும்.







           இவர் சென்ற சமயம் அருவிகளில் பெரு வெள்ளம் விழாத சமயம் தான். ஐயா அருவியில் தலையை விட்டு குளியிலை அனுபவித்ததோடு நில்லாமல் தலையை மேலே தூக்கி வாய் பிளந்து அருவி விழும் அழகை ரசித்திருக்கிறார். திடீரென்று வாய்க்குள் வலிக்கவே அருவியை விட்டு வெளியே வந்து பார்க்கும் போது ஒரு பல்லைக் காணோம்.மற்றோருபல் ஆடிக்கொண்டிருந்திருக்கிறது. அருவியின் அழகை வாய் பிளந்து ரசிக்கும் போது,நீருடன் ஏதோ சிறுகல் வேகத்துடன் பல்லில் பட்டுத் தெறித்திருக்கிறது


               பிறகென்ன ஒருவாறு முக்கிமுனகி வீடு திரும்பினார்.பல்லில் பயங்கரவேதனை.வலியைப் போக்க என்ன கைவைத்தியம் செய்தும் பயனில்லை. அதனால் பல் மருத்துவரிடம் சென்று காண்பித்தார். அவர் சென்ற மருத்துவர் மருத்துவக் கல்லூரியின் விரிவுரையாளர்.அவரிடம் விஷயத்தைக் கூறியதும், அவர் நன்கு பரி சோதனை செய்து, ஆடும் பல்லை எடுக்க வேண்டும்






எனக்கூறியதுடன், அந்த அறையில் இருந்து சிலரை அருகில் கூப்பிட்டு  வாயை மூடமுடியாதபடி கருவியில் பிடித்தபடி’
"ஸ்டூடண்ட்ஸ்! திஸ் ஈஸ் ரூட்,  திஸ் ஈஸ்  கேவிடி" என்று  திறந்த வாயினுள் விரிவாக பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்.



அவர்  வலிதாங்காமல் ஆ ! ஆ! என்று முனக, வாய் விட்டு கத்தவும் முடியவில்லை ! பசங்களுக்கு நன்கு புரிந்த பின் தான் வாயை மூட விட்டார்.
ஹும் ! கொடுமை தாங்காமல் கோவிலுக்கு போனால் அங்கு இரண்டு கொடுமை ஜிங் ஜிங் என்று ஆடிய கதை தான்!.

                                                                                           பத்மாசூரி, 




Friday, August 10, 2012

இசைத் தூண்கள்


இசைத் தூண்கள் உள்ள கோவில்கள்

அழகர்  கோவில்
ஆழ்வார் திருநகர்
களக்காடு
குற்றாலம்
சுசீந்திரம்
செண்பக நல்லூர் (துளை இசை)
தட்புத்திரி
தாடிக் கொம்பு (வேத ஒளி) சுந்தரராஜப் பெருமாள் கோவில்
 கருவரைக்கு செல்லும் வழியில் உள்ள
 மண்டபம்
திருப்பதி
திருவனந்தபுரம்
திருநெல்வேலி
தென்காசி
பெங்களூர்  ராமராசன் பேட்டை
மதுரை
வெப்பாச்சி
ஹம்பி         (இசைத்தூண்கள்-துளை இசைத் தூண்கள்)





திரு நெல்வேலி  அருள்   மிகு  நெல்லைஅப்பர்  கோவில் மண்டபம் 




இசைத் தூண்கள்




தங்க ரதம் 



மேற்குபிரகாரம் 



அம்மன் கோபுரம் 





சிற்ப அதிசியம் 


ஆழ்வார் திருநகரி 




இசைத் தூண்கள்





ராமேஸ்வரம்  பிரகாரம் 

ஆடி வெள்ளி விசேஷம்

ஆடி வெள்ளி கிழமைகளில் திருவிளக்கு பூஜை செய்தால் மிகவும் நல்லது. மகா லக்ஷ்மியின் வழிபாட்டு சுலோகம் தேவி பாகவத நூலில் கூறப்பட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த பலன் தரக் கூடிய சுலோகம்.

ஸகஸ்ர தள பத்மஸ்த கர்ணிகா வாஸி நீம்பராம்
சரத் பார்வண கோடீந்து ப்ரபா முஷ்டிகராம் பராம்
ஸ்வதேஜஸா ப்ரஜ்லந்தீம் ஸுகத்ருச்யாம் மநோஹராம்
பரதப்த காஞ்சந்நிய சோபாம் மூர்த்தி மதீம் ஸதீம்
ரத்ன பூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
ஈஷத் தஸ்யாம் ப்ரஸன்னாஸ்யாம் சச்வத் ஸுஸ்திரயெளவனாம்.
----------  பத்மா    s


Thursday, August 9, 2012

ஆடிக்கிருத்திகை.









இன்று ஆடிக்கிருத்திகை. பொதுவாக நாம் கோவிலுக்குச்சென்றால் அங்குள்ள தெய்வ சன்னதியில் கண்ணைமூடிக் கொண்டு நம் வேண்டுதல்களை ஒப்பிவித்து பிரசாதங்களை [திருனீறு,குங்குமம்] பெற்றுக்கொண்டு வந்துவிடுவோம்.









மாறாக பல கோவில்களில் காண்பதற்கரிய பல சிற்ப அதிசியங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, தஞ்சை-நாகை செல்லும் வழியில் உள்ளது "எண்கண்" எனும் முருகன் கோவில்.



இங்குள்ள முருகன் வள்ளி தெய்வானை சகிதம் மயிலின் மேல் அமர்ந்து அருள்பாலிக்கின்றார்.
முருகன் மயிலின் மேல் இடதுகாலினை மடித்து, வலது காலினை தொங்கவிட்ட நிலையில் இரு புறமும் வள்ளி தெய்வானைதேவியருடன் மயிலின் மீது அமர்ந்த நிலையில் உள்ளார்.
சிலையினை உற்று நோக்கினால் கந்தனின் காலும், தேவியர்களின் கால்களும் எவ்வித ஆதாரமும் இன்றி தொங்கிய வண்ணம்இருக்கும்.




சிலையின் மொத்த எடையும் மயிலின் மெல்லிய கால்களின் பலத்தால் மட்டும் தாங்குமாறு சிலை வடிக்கப்பட்டுள்ளது
இதுபோன்ற அமைப்பு "பொரவாச்சேரி" எனும் சிற்றூரிலும் காண்ப்படுகிறது,

இது போல பல கலை மற்றும் அறிவியல் நுணுக்கங்கள் உள்ள சிலைகள் பல கோவில்களில் காணக்கிடைக்கின்றன.

இது போன்ற அதிசியங்களை பாதுகாத்து வருங்கால சந்ததிகளுக்கு அளிப்பது நமது கடமையாகும்




Wednesday, August 8, 2012

கோகுலாஷ்டமி


  <a href=”http://www.youtube.com/watch?v=dS5MuZR-EH0&feature=player_embedded”>ARULAVENDUM by Sow.Sowmya</>

---------------------------
நம் இல்லத்தில் பிறந்த குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடுநம் இல்லத்தில் பிறந்த குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடுவது போல,மகிழ்வுடன்ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமாக கிருஷ்ணஜெயந்தி, அஷ்டமி அன்று கொண்டாருகிறோம்.
பொதுவாக அஷ்டமி,நவமி ஆகாது என்று நாம் எந்த நாளையும் ஒதுக்கக்கூடாதுஎன்றஎண்ணத்தில்தான்,ராமரும்[ஸ்ரீராமநவமி],
கிருஷ்ணரும் [கோகுலாஷ்டமி] இந்த தினங்களில் அவதரித்ததாக நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்வது போல,மகிழ்வுடன்ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமாக கிருஷ்ணஜெயந்தி, அஷ்டமி அன்று கொண்டாரடுகிறோம்.
பொதுவாக அஷ்டமி,நவமி ஆகாது என்று நாம் எந்த நாளையும் ஒதுக்கக்கூடாதுஎன்றஎண்ணத்தில்தான்,ராமரும்[ஸ்ரீராமநவமி],
கிருஷ்ணரும் [கோகுலஷ்டமி] இந்த தினங்களில் அவதரித்ததான்னோர்கள் வர



குறும்பு தவழும் கண்ணனைப் பார்த்தாலே பரவசம் தொற்றிக் கொள்ளும் நமக்கு.குடும்பத்தில்,இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுத்தும் நோக்கத்தில் தான், கிருஷ்ணஜெயந்தி, கொண்டாடப்படுகிறது.
     நம் வயது,வேலைப்பளு,மனத்துயரம் எல்லாம் மறந்து நாமே குழந்தைகளாக மாறும் நிகழ்ச்சி தான் இந்தப் பண்டிகை.



 கிருஷ்ணஜெயந்தி, அன்று வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கிருஷ்ணனபோல் அலங்கரித்து மகிழ்வார்கள்.
     ஒவ்வொரு இல்லத்திலும் கிருஷ்ணர் நம் வீட்டிற்கு வருவதான பாவனையில் குட்டிப்பாதங்களை வாசலில் இருந்து பூஜை அறை வரை வரைந்து மகிழ்வார்கள்.குழந்தைகளுடன் நாம் நம்மை மறந்து விளையாடும் போது ஏற்படும் பரவச உணர்வு, இந்த நாளில் ஏற்படும்.

  நட்பின் பெருமையை சாற்றும் நிகழ்வு தான் கண்ணன் குசேலர் கதை.பால்யத்தில் பழகிய நண்பன்  எவ்வளவு ஏழையாக இருப்புனும்,தான் அரசபோகத்தில் இருந்தாலும் அதேபாசத்துடன் குசேலரை அணைத்து மகிழ்ந்து,வறுமையைப் போக்கிய நிகழ்வு நட்பின் பெருமையை நமக்கு உணர்த்துகிறது




குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் மாதம் ஆடிமாதம். இம்மாதத்தில் கோகுலாஷ்டமியும், ஆடிக்கிருத்திகையும் அடுத்தடுத்து வருகிறது. கண்ணனுக்கும்,கந்தனுக்கும் உகந்த நாட்கள் இவை.இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ஆடும் மயிலில் கந்தன் உடன் இருப்பான். கண்ணன் அந்த மயில் இறகினை தலையில் சூடி உள்ளான்.
     கிருஷ்ணன் பிறந்தது ஒரு இடத்தில், வளர்ந்தது பிறதொரு இடத்தில். கந்தனும் பார்வதி பெற்று, கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தான். தீயவர்களை அழிக்க கண்ணன் போர்களம் கண்டான். முருகனும் தேவர்குலம் காக்க அசுரர்களுடன் போர்புரிந்தான். முருகனுக்கு தேவியர் வள்ளி-தேவயானை. கண்ணனுக்கு தேவியர் பாமா-ருக்மணி.




       மேலும், காளிங்கன் எனும் ஐந்து தலை பாம்பின் மீது நர்த்தனம் செய்யும் விடலைப்பருவத்து வடிவமும் மிகவும் ப்ரபலமானது. இடது திருப்பாதத்தினை பாம்பின் தலை மீது ஊன்றி, வலது பாதத்தினை மடித்து உயர்த்தி நடனமாடும் வடிவம்; வலது கரம் அபயம் காட்ட, இடது கரம் பாம்பின் வாலைப்பிடித்து முறுக்கிய வண்ணம் அமைந்துள்ளது.
      
       இந்த அழகிய வடிவின் சிறப்பு என்னவென்றால், பாம்பின் தலைமீது ஊன்றி இருப்பதாகத்தோன்றும் பாதத்திற்கும், பாம்பின் தலைக்கும் இடையில் சிறு இடைவளி உள்ளது. ஆகவே கண்ணனின் முழு உருவத்தின் பாரம் முழுவதும் பாம்பின் வாலைப்பிடித்திருக்கும் இடது கையின் வழியாக பாம்பின் வாலில் இறங்கி விக்கிரத்தின் பீடத்திற்கு வருகிறது. விக்ரம் முழுவ்ழ்தும் வாலைப்பிடித்த கையின் ஆதாரத்தில் இருக்கிறது. விக்ரத்தின் மையப்புள்ளி கச்சிதமாக பீடத்தில் விழுவதால் தான் இது சாத்தியமாகிறது.
       இந்த அழகிய சிலை “காளிங்க நர்த்தனம் “ எனும் பெயரில் ஊத்துக்காடு [கும்பகோணம்] எனும் ஊரில் அமைந்துள்ளது.







 ஆலிலை மேல் பள்ளி கொண்டு வலது கால் பெரு விரலை வாயில் இட்டு சுவக்கும் கண்ணணின் வடிவத்தினை கும்பகோணத்தைச்சுற்றிலும் உள்ள கோவில்களில் காணலாம்


















 வாருங்கள் பாலகன் கிருஷ்ணன் பிறந்த               தினத்தினைக்கொண்டாடுவோம்-- பத்மா