இந்த ஆண்டு 20-02-2012 மஹாசிவராத்திரி.
மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம்.
சிவாலய ஓட்டம் என்பது ஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி அன்று பக்தர்களால் அனுஷ்டிக்கப் படுகிறது. அதாவது ஒரு சிவாலயத்திலுருந்து ஒவ்வொரு ஆலயமாக 12 சிவாலயத்திற்கு ஓட்டமாக ஓடி இறைவனை ஒரே நாளில் தரிசிப்பது.12 சிவாலங்களும் கன்யாக்குமரி மாவட்டத்தில் "பத்மனாபபுரத்தை" சுற்றி 80 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ளது.
12 சிவாலயங்கள் கீழ்க்கணட இடங்களில் அமையப்பெற்றுள்ளன.:--
1.திருமலை சிவா கோவில்
2.திக்குறிச்சி
3.திற்பரப்பு.
4.திரு நந்திக்கரை.
5..பொன்மனை
6.பண்ணிப்பாகம்.
7.கல்குளம்.
8.மலன் கோடு.
9.திருவிடைகோடு.
10.திருவிதாங்கோடு.
11.திருப்பாண்டிக்கோடி.
12.திருனட்டாலம் சிவன் கோவில். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் சிவராத்திரியன்று இரவுமுழுவதும் ஓட்டமாக ஓடி ஒவ்வொரு ஆலயதில்
உள்ள சிவபெருமானை தரிசித்துசிவன் அருள் பெறுவர். நாமும் முடிந்தால் இதில் கலந்து கொள்ளலாம். இயலாவிடில் இந்த சிவத்தொண்டர்களின் அடியினைப் போற்றி வணங்குவோம்.
சிவனருள் பெற வரலாறு காட்டும் செய்தி:
ஒரு சமயம் காட்டில் புலியொன்று வேடன் ஒருவனைத்துரத்தியது.புலிக்கு பயந்த வேடன் அருகிலுள்ள ஒரு மரத்தில் ஏறிப் பதுங்கினான்.அது ஒரு வில்வமரம்.புலி இடத்தைவிட்டு நகருவதாக இல்லை. இரவும் வந்தது. வேடனும் தன்னை மறந்து தூங்கிவிடாமல் இருக்க மரத்தில் உள்ள இலைகளைப் பறித்து கீழே போட்டுக்கொண்டிருந்தான். மரத்தின் அடியில் ஒரு சிலிங்கம் இருந்திருக்கிறது. இவன் போட்ட வில்வ இலைகள் கீழேயுள்ள சிவலிங்கத்தின் மேல் விழுந்தது! அன்றைய தினம் மஹாசிவராத்திரி தினமாகும்.
விடிய விடிய தூங்காமல் பட்டினி கிடந்து.மஹாசிவராத்திரி. அன்று சிலிங்கத்திற்கு வில்வத்தில் அர்ச்சனை செய்தமையால் வேடனுக்கு சிவனருள்
கிடைத்தது ஓர் வரலாற்றுச்செய்தி. மஹாசிவராத்திரி. அன்று சிவதரிசனம் செய்வோம், சிவனருள் பெறுவோம்.
மஹா சிவராத்திரி பற்றிய மிக அழகான பதிவு.
ReplyDeleteபடங்கள் யாவும் மிகவும் அருமையாக உள்ளன.
எட்டாவது படத்தில் உள்ள தீபங்களும், 12 ஆவது படத்தில் உள்ள கோலத்துடன் கூடிய தீபமும், குட்டிகுட்டி லிங்கங்களும் மிகவும் சிறப்பாக உள்ளன.
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
12 சிவாலய ஓட்டங்கள் பற்றிய விபரமும், அவற்றின் இருப்பிடமும் கொடுத்துள்ளது மிகவும் பயனுள்ள செய்திகளாகும். ;)
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteநானும் சிவாலய ஓட்டம் பற்றி பதிவு எழுதிஇருக்கிறேன்.. வெளியிட சிவராத்திரி எதிர்பார்த்திருந்தேன்..
நல்ல உபயோகமான பதிவு. உங்களது வலைபதிவு லேஅவுட்டையும் ஃபாண்ட் சைஸையும் பெரிதுபடுத்தவும். ஃபலோயர்ஸ் லிஸ்டில் சேர்ந்து விட்டேன்.
ReplyDelete