Pages

Friday, November 23, 2012

வணங்கி வாழ்த்தும்........

















இறைவன் துதியை கேட்க:









-->
அனைவருக்கும் எனது திருகார்த்திகை பரணி தீப, மகாதீப வாழ்த்துக்கள்.
தங்கள் அனைவரின் வாழ்விலும் ஒளி குறைவில்லாமல் வீசட்டும்.

மீண்டும் அனைவரையும் சந்திக்கும்வரை(?!) வாழ்த்துகூறி விடைபெறும் , உங்கள் அன்புள்ள பத்மாசூரி


Thursday, November 22, 2012

கார்த்திகை தீபம்’

பண்டைய நூல்களில் – தீபம் பற்றியச் சிலக்குறிப்புகள்
சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
”கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள் ” என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச் சிறப்பாக
குறிப்பிடுகிறார்.

காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதியின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்திருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாகக் கூறியுள்ளார்.

திரிசங்கு மன்னன் இழந்த தன்னுடைய நாட்டைக் கார்த்திகை தீப விரதமிருந்து பெற்றான். மாணிக்கவாசகர், ”சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே” என்று சிவபெருமானைக் குறித்துப் பாடியுள்ளார். வள்ளலார் ‘ஒளியின் வடிவம் சிவம்’ என்று கருதி, அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் ‘நமச்சிவாய’ மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.
ருக்வேதத்தில் இந்திரன் அடுத்தபடியாக அக்னிபகவான் முக்கிய இடம் பெறுகிறார்.

கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார்.
திருமூலரும் தீபவழிபாட்டை பற்றி திருமந்திரத்தில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்:
”விளக்கொளியாகிய மின் கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே !
விளக்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடுவார்கள் விளங்கினர் தானே !
என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
”நலமிகு கார்த்திகை நாட்டவரிட்ட
தலைநாள் விளக்கில் தகைமை யுடைவளாகி…”
என்று கார்நாற்பது கூறுகிறது.

நன்மைமிக்க கார்த்திகை விழாவில் நாட்டினர் ஏற்றி வைத்த முதல் தீபத்தைப் போல் அழகுடையவளாய் என்பது பொருள்.
”கார்த்திகை விளக்கிட்டனன்” என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது.
தொல்காப்பியம் ”வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்” என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.
விளக்கின் ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை, அன்பு இவற்றிற்கு ஒப்பிடுவார்கள். அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி  வழிபடுகிறார்கள்.


இம்மாதத்ததில் ஒவ்வொரு சோமவாரத்தன்றும், தமிழக புராதன சிவாலயங்கள் யாவற்றிலும் அந்திப்பொழுதில் அதுவும் மகா பிரதோஷ காலத்தில் “நூற்றியெட்டு” சங்காபிஷேகம் இறைவனுக்குச் செய்யப்பட்டு வருவது வழக்கம்.


கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி, ஞான ஒளியை நம்முள் பெருக்க உகந்த விழாவாகும்
                                                                                                நன்றி.---லிஃப்கோ.

Sunday, November 18, 2012

ஒரு பிளேட் விஷம்!!!

அவசர யுகத்தில் வாழும் நாம் துரித உணவு என்ற பெயரில் உண்பதும், நமது மண்ணிற்கேற்ற உணவுவகைகளைத் தவிர்த்து பீட்ஸா, பர்கர், நூடுல்ஸ் என உடல் நலத்திற்கு ஒத்து வராத உணவினை உண்ண ஈட்அவுட் என்ற பெயரில் உணவகத்தில் ஆர்டர் செய்வது ஒரு பிளேட் விஷத்தை தான்!
     நல்ல உடல் உழைப்புடன், அவ்வப்போது இயற்கையில் விளையக்கூடிய, கிடைக்கக் கூடிய காய், கனிகளை சாப்பிட்டு வந்தாலே தேவையற்ற பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
     நமது உணவுப்பழக்கத்தில் தவிர்க்கமுடியாத பொருளாக சேர்ந்து கொண்ட வெள்ளை பிரெட்டும், நூடுல்ஸ்சும், இப்பொழுது வெளி நாட்டினர் கூட தவிர்ப்பது நிறைய பேருக்க்கு தெரியவில்லை. ஒரு சத்தும் இல்லாத வெள்ளை ரொட்டிக்கு பதிலாக கோதுமை ரொட்டியை பயன் படுத்தலாம். உப்பின் பயன் பாட்டைக் குறைத்தாலே பல நோய்களின் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம். அது போலவே ஜீனி என்ற வெள்ளைச் சர்க்கரைக்குப்பதில் பனங்கருப்பட்டி நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை உபயோகித்தால் உடலில் கூடுதல் கலோரியையும் அதனால் உண்டாகும் ரத்த அழுத்தம், ஈரல் மற்றும் சிறு நீரக நோய், சர்க்கரை நோய் போன்றவற்றைத் தடுக்கலாம்.   
    கண்டதை உண்டு பிற்காலத்தில் மருந்தையே உணவாக எடுத்துக் கொள்ளும் நிலமை உண்டாகாமல் தடுக்க, உணவை மருந்தாகச் கொள்ளலாமே!
     இறைவன் நமக்காகவே அந்தந்த பருவத்துக்கு ஏற்ப காய் கனிகளைப் படைகின்றான்.
     இயற்கையில் நமக்கு கிடைக்கும் காய்கனிகளை உற்று கவனித்தால், இறைவன் நம் உடல் உறுப்புகளுக்கு ஏற்ற, பாதுகாக்கச் கூடிய காய்கனிகளை நமது பல உடல் உறுப்புக்களப் போலவே படைத்திருப்பது தெரியும்.
    

     கேரட்டை வட்டமாக நறுக்கிப் பாருங்கள் மனிதனுடைய கண், கருவிழி போன்றவை தெரிகிறதா. ஆமாம் கேரட்டை சாப்பிடுவதால் கண் தக்கபடி பாதுகாக்கப்படுகிறது.
     காராமணிப்பயறு கிட்னி போன்ற அமைப்பில் உள்ளது. அது சிறு நீரகத்தைப் பாதுகாக்கவும், நோய் தடுப்பு சக்தியாகவும் விளங்குகிறது.
     வெங்காயத்தின் உட்பகுதியை உற்றுப்பார்த்தாலே மனித உடலின் அணுக்களைப் போன்று இருக்கும். வெங்காயம் ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
     தக்காளியை குறுக்கு வெட்டுத் தோற்றம் இதயத்தின் நான்கு அறைகளை ஒத்திருக்கும். அதில் உள்ள வைகோபிம் எனும் சத்து இருதயத்தைப் பாதுகாக்கும்.
     வல்லாடைகீரை இலை அசல் மனித மூளையின் வடிவமைப்பில் உள்ளது. அதனால் தான் ஞாபக சக்தி பெருக வல்லாரையை உணவில் சேர்க்கச் சொன்னார்கள் நம் முன்னோர்.
     திராட்சைக் குலை இருதய வடிவிலும், இருதய உயிரணு தோற்றத்திலும் இருக்கும். இருதயத்துக்கும், ரத்தத்திற்கும் வீரியத்தை அளிப்பது திராட்சை.
     வால்நட்டை குறுக்கே வெட்டிப் பார்த்தால் அசல் பெருமூளை, சிறு மூளையை போன்று இருக்கும். மூளையின் சீரிய செயல்பாட்டிற்கு வால்நட்.
     சர்க்கரைவள்ளிக்கிழங்கு கணையதைப் போலவே இருக்கும். நீரழிவு நோய் வராமல் தடுக்க இது சிறந்தது.
     ஆகவே எந்தக் காய்கறி நமது எந்த உறுப்புக்குப் பயன் தருமோ, அந்த உறுப்பின் வடிவிலேயே இயற்கையினால் படைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இவை செயற்கை உரம் தவிர்த்து, இயற்கை உரத்தினால் விளைந்திருக்க வேண்டும்.
     குக்கர் வந்தது! காய்கறிகளில் உள்ள நன்மை பயக்கும் பொட்டாசியம் அழிந்தது. அதற்கு பதில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் வெள்ளை உப்பை (சோடியம் குளோரைடு) சேர்த்து பல வியாதிகளுக்கு கதவைத்திறந்தோம்!
     அடுத்து “இண்டக்சன் அடுப்பும், அவனும் வந்தது உணவில் உள்ள கொஞ்ச நஞ்சம் இருந்த சத்தும் அழிந்தது. போதாதற்கு நூடுல்ஸ் வந்தது! எல்லாம் கெட்டது! இது போதாதென்று துரித உணவு (பாஸ்ட் புட்) வந்தது. ஈட் அவுட் என்ற பெயரில் வெளியே சென்று “ஒரு பிளேட் விஷம் தான் ஆர்டர் செய்கிறோம்.

     எனவே, கண் முழுவதும் கெடுவதர்க்கு முன் சூரிய நமஸ்காரம் செய்வோம்.




Tuesday, November 13, 2012

மொட்டுகளின் பூந்தோட்டம்











         நவம்பர் 14 நேரு மாமா பிறந்த தினம்---
                       குழந்தைகள் தினம்.

Monday, November 12, 2012

இனிப்புடன் கொண்டாடுங்க!


























மனம் கனிந்த தீப ஒளி நல்வாழ்த்துக்கள்.
இந்த நன்னாளில் தங்கள் இல்லத்தில் தீபங்களின் ஒளிபோல்
மகிழ்ச்சி நிலவட்டும்.
சரவெடிபோல் இன்பம் பல்கிப் பெறுகட்டும்.

மத்தாப்புபோல் குதூகலம் வீடு முழுவதும் நிறையட்டும்.--
 
பத்மாசூரி