Pages

Wednesday, August 15, 2012

மரமெல்லாம் கல்லாகுமா ?


வக்கிர காளி அம்மன்

விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை எனும் ஊரில் எழுந்தருளியுள்ளாள்  வக்கரகாளியம்மன்.


திருவக்கரை ஸ்தலம் மிகப்பழமையும்,பெருமையும் புனிதமும் வாய்ந்த புண்ணிய தலமாகும்.திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிவத்தலம் இது.இறைவன்ஸ்ரீசந்திரமெளலீஸ்வரர்.இறைவிஅமிர்தாம்பிகை.
திண்டிவனத்திலிருந்துமயிலம்என்றமுருகன்ஸ்தலம்வழியாகபாண்டிச்சேரிசெல்லும்பாதையில்,பெரும்பாக்கம்என்றசிற்றூர்க்க்குதெற்கே7கி.மீ.தூரத்தில்,வராகநதி என அழைக்கப்படும் சங்கராபரணி என்னும் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது திருவக்கரை. 


இத்திருக்கோயில்,கருவறைக்கோயிலும்அதைச்சார்ந்தஉட்கோயில்களும்,மண்டபங்களும், சுற்றுச்சுவர்களும்,கோபுரமும் சிறப்புடன் 10 ஏக்கர் நிலப்பரப்பில் விளங்குகிறது.2000 ஆன்டுமிகப் பழமையான் கோயில் இது.


திருவக்கரை  கோவில் 
இக்கோயிலின் ராஜகோபுரம், துவஜஸ்தம்பம், நந்தி கருவறையில் உள்ள லிங்கம் ஒரே நேர்க்கோட்டில் இல்லாமல், ஒன்றுவிட்டு ஒன்று விலகிவக்கிரமாக இருப்பதாலும், சனி பகவானின் வாகனமான காகம், இடது புறம் அமைந்து வக்கிரமாக காட்சி அளிப்பதாலும், இத்திருத்தலம் திருவக்கரை என்ற பெயுருடன் விளங்குகிறது.


மண்டபம் 
     வக்கிர காளியையும், வக்கிர சனீஸ்வரனையும் வழிபடுவதால், நவக்கிரகங்கள் வக்கிர நிலையில் இருக்கும் போது உண்டாகும் தொல்லைகள் நீங்கும்.சம்பந்தர்  பாடிய  ஸ்தலம் சன்னதி வரலாறு:-
    வக்கிராசூரன் எனும் அரக்கன் கொடுமகள் பல செய்தமையால் சிவபெருமான் ஆணைப்படி வரதராஜப்பெருமாள் அவனை அழிக்கிறார். அரக்கனின் தங்கை ‘துன்முகியும், கொடுங்செயலை செய்தமையால், அவளை வதம் செய்ய பார்வதி முயலும் போது, அரக்கி கருவுற்றிருந்ததால்,கர்ப்பிணி வயிற்றில் உள்ள சிசுவுடன் கர்ப்பிணியை வதம் செய்யக் கூடாது என்ற சாஸ்திர முறைப்படி,முதலில் அரக்கியின் வயிற்றைக் கிழித்து, பிண்ட சிசுவை தனது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு, பின் அரக்கியை வதம் செய்துள்ளாள்.
வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் “வக்கிர காளி எனப்பெயர் பெற்றாள்.
வக்கிர காளியின் உருவம் பிரமண்டமானது. சுடர்விடும் தீக்கங்குகள் உடன் கூடிய தலை,மண்டை ஓட்டு கிரீடம், வலது காதில் தொங்ககும் சிசு,எட்டுத்திருக்கரங்களிலும் பாசம், வாள் முதலான படைக் கலங்கள் கொண்டு , இடது காலினை ஒட்டி ஒரு கை விரல்களை லகவமாக மடக்கி, ஆள் காட்டி விரலால் தன் பாதத்தினை சுட்டியவண்ணம் உக்கிரகோலத்தில் காடசி தருகிறாள்.
நவகிரகங்களில் ராகு கேதுவுக்கு அதிதேவதை வக்ரகாளி. எனவே இச் சன்னதியை 5முறை வலமாகவும் 4 முறை இடமாகவும் சுற்றி வந்து வணங்கவேண்டும்

 ராஜகோபுரத்தை அடுத்து உள்ளது வக்கிரகாளியம்மன் சன்னதி.
இறைவன் சந்திர மெளலீஸ்வரர்,மூன்று முகங்களுடன் இங்கு காட்சி தருகிறார். லிங்கத்தின் கிழக்கு பகுதி தட்புருடமுகம், வடபகுதி வாம தேவமுகம், தென்பகுதி அகோரமுகம். அதிகாலை தட்புருடமுகத்தை மஞ்சள் பூசியும், உச்சிக்காலத்தில் வாமதேவமுகத்தை சந்தனம் பூசியும், மாலை அகோரமுகத்தை குங்குமம் அணிவித்தும் பூஜை செய்து வணங்குகிறார்கள்.
வக்கிர காளியையும், வக்கிர சனீஸ்வரனையும் வழிபடுவதால், நவக்கிரகங்கள் வக்கிர நிலையில் இருக்கும் போது உண்டாகும் தொல்லைகள் நீங்கும். 


துவார  பாலகர் 

நந்தி 
சித்தர் மண்டபத்தின்  முன் நந்தி கண்ணன் 


 வரதராஜப் பெருமாள் சன்னதியின் உள், நந்தகோபாலனின் திருஉருவச்சிலை உள்ளது.ராமவதராமும்,கிருஷ்ணவதாரமும் ஒன்று என்பதனை உணர்த்த இறைவன் ராமகிருஷ்ணனாக பாமா, மற்றும் ருக்மணியான நாராயணி தேவியுடன் இணைந்து கையில் வில்லும் அம்புமாக காட்சி அளிக்கிறார்.


நந்த கோபாலன் [பாமா ருக்மணி ]

 சந்திரமெளலீஸ்வரர் சன்னதிக்கு வலதுபுறம் ஆடலரசன் நடராஜப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இங்கு நடராஜர் வழக்கத்திற்கு மாறாக இடது காலை ஊன்றி வலது    காலைத் தூக்கி வக்கிர தாண்டவம் ஆடுகிறார். கருவறைக்கு தெற்கே குண்டலினி மாமுனிவர் ஜீவசமாதி உள்ளது.கால் மாறி ஆடும் 

நடராசர் 
  பெருமாள் கோயிலின் பின்புறம் ஒரே ஒரு சிறு லிங்கததில் 1008 சிவலிங்கள் அமையப் பெற்ற சஹஸ்ரலிங்கம் தனி கோவிலாக உள்ளது. இறைவி அமிர்தாம்பிகை திருக்கோயில் தெற்கு நோக்கி 8 ஆழகிய தூண்களைக் கொண்ட மண்டபத்தில் அமையப் பட்டுள்ளது.

  கோவிலினுள் வரதராஜப் பெருமாளும் தனி சன்னத்யில் 6 அடி உயரத்திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

வரதராஜ பெருமாள் 
6அடி உயர வரதராஜர் 

இக்கோயிலின் அமைப்பு, உறையும் இறைவன் ( மும்முகலிங்கம் ) தெற்கு நோக்கிய அம்மன், மேற்கு நோக்கிய பெருமாள், வடக்கு நோக்கிய வக்கிரகாளி, மேற்கு நோக்கிய வக்ரலிங்கம், தெற்கு திரும்பிய காகவாகனத்துடன் சனி, ஒரே நேர்க்கோட்டில் அமையாத கொடி மரம், திருநந்தி, மூலஸ்தானம், மற்றும் நடராஜப் பெருமானின் வக்ரதாண்டவம் ஆகியன வேறெங்கும் காண இயலாத காட்சியாகும்.கல் மரம்:-  கோயிலுக்கு அருகில் இந்திய நில இயல் துறையினரின் தேசியப் புதை படிவ பூங்கா உள்ளது, அவசியம் காணத்தக்கது. இங்கு பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் மரங்களாக புதைந்த மரங்கள்,பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றத்தோடு இன்று கல்லாக, கல்மரங்களாக காட்சி அளிக்கின்றது. இக்கல் மரங்களை கிராம மக்கள் வரதராஜப் பெருமாளால் அழிக்கப்பட்ட வக்ராசூரனின் எலும்புகள் எனக் கூறுகின்றனர்.

பிற ஸ்தலங்கள்:- திருவக்கரை-பாண்டிச்சேரி பாதையில், 15 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சிற்றம்பலம் என்ற சிற்றூர்க்கு கிழக்கே பிரம்மாண்டமான பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலும் [நாமக்கல் ஆஞ்சநேயர் சிலையைப்போல்    , 3மடங்கு உயரம் ]  வடக்கே அம்பர் மாகாளம் என்ற சிவஸ்தலமும் (சிவலிங்கம் 3 துண்டுகளாக்ப் பிரிந்து முனிவரால் ஒன்றாக கட்டப்பட்டது), கிழக்கே பாண்டிச்சேரி செல்லும் வழியில் முரட்டாண்டி எனும் சிற்றூரில் பிரம்மாண்டமான சனீஸ்வரன் மற்றும் நவக்கிரக சிற்பங்களுடன் கூடிய கோவிலும், 2000 ஆண்டு பழமையான பிரத்தியங்கரா தேவி கோவிலும் உள்ளது. (அம்மனின் பிரம்மாண்டமான திரு உருவம் சுதையினால் செய்யப்பட்டு பூமியின் மேற்பரப்பிலும், ஆளுயர சிலை பூமிக்கு அடியில் நிலவறைக் கோயிலிலும் உள்ளது.                 நாமக்கல் ஆஞ்சநேயர் 


[முரட்டாண்டி]   பிரத்தியங்கரா தேவி கோவில பூதம் வாய் 
வழியே நிலவறை கோவில்  
சனீஸ்வரன் -[முரட்டாண்டி அருகில்]                                                                               பத்மா சூரி

12 comments:

 1. கரி துண்டு வைரம் ஆகும் போது மரம் கல்லாஆகாதா!

  நாங்கள் வகரகாளி கோவில், மரம் கல்லான இடம் எல்லாம் பார்த்து இருக்கிறோம்.
  வகரகாளியைப் பற்றி நல்ல விரிவான பதிவு.
  மற்ற கோவில் உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. திண்டிவனம் [அல்]பாண்டியில் இருந்து காரில் வந்தால், திருச்சிற்றம்பலம் என்ற இடத்தில் இருந்து அனைத்து கோவில்களையும்தரிசிக்கலாம். பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலும், நவக்கிரஹங்களும் உள்ள சனீஸ்வர கோவிலும் மிகவும் பிரமாண்டமாக இருக்கும்; இடுகைக்கு நன்றி
   [im]http://assets2.desktopnexus.com/thumbnails/1134629-thumbnail.jpg[/im]

   Delete
 2. வக்கிர காளியையும், வக்கிர சனீஸ்வரனையும் வழிபடுவதால், நவக்கிரகங்கள் வக்கிர நிலையில் இருக்கும் போது உண்டாகும் தொல்லைகள் நீங்கும்

  மிகச்சிறப்பான படங்களுடன் பகிர்வுக்கு நிறைவான பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. மிகச்சிறப்பான படங்களுடன் பகிர்வுக்கு நிறைவான பாராட்டுக்கள்.
   [im]http://assets2.desktopnexus.com/thumbnails/1144691-thumbnail.jpg[/im]
   தங்களின் வருகைக்கு நன்றி.

   Delete
 3. wonderful information...

  thank you...padma suri...

  ReplyDelete
  Replies
  1. THANK YOU VERY MUCH SIR!
   [im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT99rc6zJzv9fovnWzFa4XBsaVrp8ad_mAGUosKFCpPT23GOh2V9AVCT48[/im]

   Delete
 4. wonderful information..

  thank you padma suri..

  ReplyDelete
  Replies
  1. Thanks for your kind comment sir,

   [im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQeYZXqFendNsnHtinky3i7LRThVUIoi-Ib9bd-DaYeJYfnnaVdm12YHmsW[/im]

   Delete
 5. Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

  ReplyDelete
  Replies
  1. "Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR."

   [im]http://assets2.desktopnexus.com/thumbnails/1143429-thumbnail.jpg[/im]

   Delete

 6. வக்கிர காளி அம்மன்

  அழகான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு.

  எப்படியோ இதைப் பார்க்காமல் தவற விட்டுள்ளேன்.

  பாராட்டுக்கள். அன்புடன் vgk

  ReplyDelete
 7. தங்களின் பாரட்டுகளுக்கு நன்றி
  [im]http://assets2.desktopnexus.com/thumbnails/1140337-thumbnail.jpg[/im]

  ReplyDelete