Pages

Saturday, January 7, 2012

நடராஜரின் ஐந்து [5] சபைகளும், ஆருத்ரா தரிசனமும்:-


நடராஜரின் ஐந்து [5] சபைகள் :

    எண்         ஸ்தலம்                 சபையின் பெயர்           .தாண்டவ நிலை 

      1.              சிதம்பரம்                  பொன்னம்பலம்                 ஆனந்த தாண்டவம்.
      2.              மதுரை                    ரஜத சபை[வெள்ளி]             ஸந்தியாதாண்டவம்
      3.             திரு நெல்வேலி             தாமிரசபை                      முனி தாண்டவம்
      4.             குற்றாலம்                  சித்திரசபை                       திரிபுரதாண்டவம்
      5.             திருவாலங்காடு             ரத்தினசபை                       காளி தாண்டவம்

                                                         அன்னூர் நடராஜர்


                                                      ரத்தின்கிரீச்வரர் குளித்தலை




                                                     மதுரை மீனாஷி கோபுரம்

                                       சிவபெருமானின் தாண்டவங்களில் சில

                                          நடன மாதுவின் சிவ தாண்டவம்
                                                              




-                                                        ஆனையில் காளை

                                                சிவனின் யானை சம்ஹாரம்
                                                               சிவதாண்டவம்

                                             சிவனின் காளிங்க நர்த்தனம் {பின்புறம்}

                                     சிவனின் காளிங்க நர்த்தனம் {முன்புறம்}


                                              

திருவாதிரை நன்னாளில் குற்றாலத்தில் "தாண்டவ தீபாராதனை" நடக்கும்.தீபத்தட்டினை மேல்,கீழ்,மற்றும் பக்கவாட்டில் நடராஜர் நாட்டியமாடுவது போல் இயக்கி தீபராதனை காட்டுவதைக் காண கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

                        திருவாதிரை நட்சத்திரம்   

ஆருத்ரா தரிசனம்:
பார்வதிக்கு சிவன் பிரணவ மந்திரத்தை உபதேசித்த தலம் உத்தரகோசமங்கை.[உத்தரம்--உபதேசம். கோசம்--பரமரகசியம். மங்கை--பார்வதி] பஞ்சபூதத்தலங்களுக்கும்,பாண்டி 18 தலங்களுக்கும் மிக மூத்தது.சிவபுராணம் தோன்றக்காரணமான ஊர்.
கோவிலின் பெயர், அருள் மிகு மங்கள நாதர்,மங்களேஸ்வரி, மரகத நடராஜர் திருக் கோவில்.திருத்தலத்தின் பொன்னூஞ்சல் பாடல்கள் பிரசித்தி பெற்றது.
          கோவிலின் மரகத நடராஜர் உலகப்புகழ் பெற்றது.
மிக உயரமான [6அடி] நடராஜர்,பச்சை நிற மரகதக்கல்லால் ஆனவர்.மிக மென்மையானது ஆகையால்,வருடம் முழுவதும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் இருப்பார்.சந்தனக்காப்பு நடராஜர்!

இராவணனின் மருமகனான  தேவலோக சிற்பி மயனால் சாஸ்திரமுறைப்படி உருவாக்கி,பிரதிஷ்டை செய்யப்பட்டது மரகத நடராஜர். சிலையினை  முதலில் பிரதிஷ்டை செய்து அதன்பின் கருவறை கட்டப்பட்டது பாதுகாப்புக்கருதி! கருவறை வாயி ல்  சிலையை விட சிறியதாக இருக்கும்! மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆருத்ரா தரிசனத்தின் போது,சந்தனக்காப்பு களையப்பட்டு, பச்சை மரகத நடராஜர் காட்சி அளிப்பார்.அன்று விதம் விதமான அபிஷேகங்கள் நடைபெறும். பால் அபிஷேகத்தின் போது,பச்சை மரகத திருவுருவின் மீது பால் பட்டுத்தெறிக்கும் அழகே தனி அழகு. அப்போது சுவாமியின்  முன்பாகக் காட்டப்படும் தீபம் நடராஜர் திரு உருவுக்குள் ஊடுருவி மறுபுறத்தில் தெரியும். நடராஜர் மேனியில் சாற்றிய சந்தனம் மருத்துவகுணம் நிரம்பியது

                                                               சிவதாண்டவம்


              
                                   



4 comments:

  1. அருமையான திருவாதிரை பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. இராஜராஜேஸ்வரி said...

    அருமையான திருவாதிரை பகிர்வு.. பாராட்டுக்கள்..
    [im]http://i399.photobucket.com/albums/pp75/mesyamsul82/thankyousmiley.gif[/im]

    ReplyDelete
  3. கலையுணர்வுடன் கூடிய மிகவும் அழகழகான படங்கள்.
    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வை.கோபாலகிருஷ்ணன் said...


      [im]http://i399.photobucket.com/albums/pp75/mesyamsul82/thankyousmiley.gif[/im]

      Delete